காந்தியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரத் நகரம் அருகே உள்ள பர்தோலி ஊரில், சர்தார் வல்லபாய் படேல் உடன் மகாத்மா காந்தி, நிலவரியை விலக்கக் கோரி உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டார்.

தியின் உண்ணாநிலைப் போராட்டங்கள், இந்திய விடுதலைக்கும், தீண்டாமைக்கு எதிராகவும், சமய நல்லிணக்கதிற்கும் மேற்கொள்ளப்பட்டவையாகும். மகாத்மா காந்தி, 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் மேற்கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களைக் கண்ட, பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள் வியந்தனர். உண்ணாநிலைப் போராட்டத்தை, அகிம்சை முறையான ஆயுதமாகக் கொண்டார் காந்தி.[1]

உண்ணாநிலைப் போராட்டங்கள்[தொகு]

எண் ஆண்டு/மாதம் போராட்ட நாட்கள் இடம் காரணங்கள்/கோரிக்கைகள் விளைவுகள் முடிவு
1 1913 (நவம்பர் 10-16) 7 நாட்கள் போனிக்ஸ், டர்பன், (தென்னாப்பிரிக்கா) கழுவாய் சார்ந்த முதல் உண்ணாநிலைப் போராட்டம்[2]
2 1914 (ஏப்ரல்) 14 நாட்கள் கழுவாய் சார்ந்த இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம் [2]
3 1918 (பிப்ரவரி) 3 நாட்கள் அகமதாபாத் நூற்பாலை தொழிலாளர் நலனுக்காக இந்தியாவில் முதல் உண்ணா நோன்பு ஆலைத் தொழிலாளர்கள் தீர்வுக்கு இசைந்தனர்[3]
4 1919 (ஏப்ரல் 14-16) 3 நாட்கள் வன்முறைக்கு எதிரான முதல் உண்ணாநிலைப் போராட்டம்: நாடியாவில், தொடருந்தை கவிழச் செய்தமைக்கு[2]
5 1921 (நவம்பர் 19-22) 4 நாட்கள் வன்முறைக்கு எதிரான இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம்: வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்திய வருகையை எதிர்த்து நடந்த வன்முறைகள்[2]
6 1922 (பிப்ரவரி 2-7) 5 நாட்கள் பர்தோலி, சூரத் வன்முறைக்கு எதிரான மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம் : சௌரி சௌராவில் வன்முறைக்கு பிராயசித்தமாக
7 1924 (செப்டம்ப்ப்ர் 18-அக்டோபர் 8) 21 நாட்கள் தில்லி முதல் இந்துமுஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு உண்ணாநிலைப் போராட்டம் முதல் ஒத்துழையாமை இயக்கத்திற்குப்பின், இந்து-முஸ்லிம்கள் மத நல்லிணக்கம் கடைப்பிடித்தனர். குரான் மற்றும் பகவத் கீதை ஓதியபின் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்தல்.[4]
8 1925 (நவம்பர் 24-30) 7 நாட்கள் கழுவாய் சார்ந்த மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம்[2]
9 1932 (செப்டம்பர் 20-26) 6 நாட்கள் புனே தீண்டாமைக்கு எதிரான முதல் உண்ணாநிலைப் போராட்டம்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேர்தலில் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து எரவாடா மத்திய சிறையில் உண்ணாநிலைப் போராட்டம்: சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் பூனாவில் தொடர் உண்ணாநோன்பு. அனைத்து தேசியத் தலைவர்கள் பூனாவில் காந்தியை சந்தித்தனர்.. பிரித்தானிய ஆட்சி மதம் மற்றும் சமுக வாரியாக தேர்தல் மற்றும் அரசுப் பணி இட ஒதுக்கீட்டுக் கொள்கையை திரும்பப் பெறுதல்[4]
10 1932 (டிசம்பர் 3) 1 நாள் தீண்டாமைக்கு எதிரான இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம்:[2]
11 1933 (மே 8 முதல் 29 வரை) 21 நாட்கள் தீண்டாமைக்கு எதிரான மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம்: தலித்துக்களின் முன்னேற்றத்திற்காக[5]
12 1933 (ஆகஸ்டு 16-23) 7 நாட்கள் தீண்டாமைக்கு எதிரான நான்காம் உண்ணாநிலைப் போராட்டம் (சிறையில்): தலித்துக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்க[5] உடல்நலக் குறைவால் 23 ஆகஸ்டு 1933இல் விடுதலை செய்யப்பட்டார்.[6]
13 1934 (ஆகஸ்டு 7-14) 7 நாட்கள் வன்முறைக்கு எதிரான நான்காம் உண்ணாநிலைப் போராட்டம்: காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களின் வன்முறைக்கு எதிராக [2]
14 1939 (மார்ச்) 3 நாட்கள்[7] ராஜ்கோட்
15 1943 (பிப்ரவரி 12- மார்ச் 4) 21 நாட்கள் தில்லி சமய வன்முறைகளை நிறுத்தக் கோரிய உண்ணாநிலைப் போராட்டம்[8][9]
16 1947 (செப்டம்பர் 1-4) 4 இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்காக இரண்டாம் உண்ணாநிலைப் போராட்டம்[2]
17 1948 (சனவரி 12-18) 6 நாட்கள்13[10]-18) இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கதிற்கான மூன்றாம் உண்ணாநிலைப் போராட்டம்: இந்து-இசுலாமிய சமுக அமைதி திரும்புதல் நாட்டில் சமுக அமைதியை நிலைநாட்ட அனைத்து சமயத் தலைவர்கள், காந்திஜியின் கூட்டுத் திட்டத்தை ஏற்றல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "National hunger strike?". Gulf Daily News. 9 June 2011. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=307474. பார்த்த நாள்: 27 January 2012. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 O.P. Dhiman. Betrayal of Gandhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-78-35-746-1. http://books.google.ro/books?id=jSXgQYRxfmkC&pg=PA315. 
  3. Jack, Homer A. (2005). "Short Chronology of Gandhi's Life". Mahatma.com. Worldview.com. 23 அக்டோபர் 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 January 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. 4.0 4.1 "The Previous Fasts". இந்தியன் எக்சுபிரசு. 4 March 1943. http://news.google.com/newspapers?id=LLw-AAAAIBAJ&sjid=JEwMAAAAIBAJ&pg=4995,4559107&dq=. பார்த்த நாள்: 27 January 2012. 
  5. 5.0 5.1 "Mohandas K. Gandhi: The Indian Leader at Home and Abroad". த நியூயார்க் டைம்ஸ். 31 January 1948. 30 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. Rajmohan Gandhi. Gandhi: The Man, His People, and the Empire. பக். 361. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-25570-8. http://books.google.ro/books?id=FauJL7LKXmkC&pg=PA361#v=onepage&q&f=false. 
  7. "Rajkot dispute settled - Gandhi breaks his fast". The Advocate. 8 March 1939.
  8. "Anna a man of stamina, his longest fast lasted 12 days". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 24 August 2011. http://www.dnaindia.com/india/report_anna-a-man-of-stamina-his-longest-fast-lasted-12-days_1579090. பார்த்த நாள்: 27 January 2012. 
  9. "Gandhiji Breaks Fast". இந்தியன் எக்சுபிரசு. 4 March 1943. http://news.google.com/newspapers?id=LLw-AAAAIBAJ&sjid=JEwMAAAAIBAJ&pg=2180,4555643. பார்த்த நாள்: 30 December 2013. 
  10. https://thewire.in/communalism/the-day-gandhi-began-his-last-fast


வெளி இணைப்புகள்[தொகு]