சமய நல்லிணக்கம், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமய நல்லிணக்கம் அல்லது மத நல்லிணக்கம் (Religious harmony in India) இந்தியா பல்வேறு சமய நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் நாடு. இந்திய மக்கள் பிற சமய மக்களின் நம்பிக்கைகளை மதித்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.[1] ஒவ்வொரு இந்தியனும் தனக்குப் பிடித்தமான சமயத்தை தேந்தெடுக்கவும், அதனை பின்பற்றி வாழவும் உரிமை வழங்கியுள்ளது.[2] சிறுபான்மையின சமய மக்கள், தங்களுக்குரிய இறை வழிபாட்டு இடங்களை கட்டிக் கொண்டு வழிபடவும் உரிமை வழங்குகிறது.[3]

ரிக் வேதம்[தொகு]

ரிக் வேதம் சமய நல்லிணக்கத்தைப் பற்றி கூறுமிடத்து, அறிவாந்தோர் உண்மையான ஒரே மறைபொருளை பலவிதங்களில் விளக்குகின்றனர் எனக் கூறுகிறது.[4]

சமய நல்லிணக்க நாள்[தொகு]

ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு திங்கள், இருபதாம் நாளை சமய நல்லிணக்க நாளாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவினங்களில் சமயம், மொழி மற்றும் சாதி நல்லிணக்க உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்படுகிது.[5][6] இதனையும் காக

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]