ஜே. சி. குமரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா (சனவரி 4, 1892 - சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜே. சி. குமரப்பா என்பவர் காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் எனக் கருதப்படுபவர் ஆவார். தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரான இவர், பட்டயக் கணக்கராக விளங்கினார். பின்னர் நிர்வாக மேலாண்மை, பொருளியல் ஆகிய துறைகளிலும் தகைமைகள் பெற்றார். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து பணியாற்றிய குமரப்பா, காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தார். காந்தியின் "யங் இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலும் இவர் பணிபுரிந்துள்ளார். ஜே.சி.குமரப்பா தனது ஓய்வுக் காலத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமம் வந்தார். அவர் சட்டப்பூர்வமாக 1956 ல் ஆசிரமத்தை பதிவு செய்து முதல் தலைவரானார். காந்தி நிகேதனில் இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம் எனும் பெயரில் மகளிர் மற்றும் இளையோருக்குப் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._சி._குமரப்பா&oldid=2786741" இருந்து மீள்விக்கப்பட்டது