கோபாலகிருஷ்ண காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபாலகிருஷ்ண காந்தி
கோபாலகிருஷ்ண காந்தி
22வது ஆளுநர், மேற்கு வங்காளம்
பதவியில்
டிசம்பர் 2004 – சூலை 2009
முன்னையவர்வீரன் ஜெ. ஷா
பின்னவர்தேவானந்த் குன்வார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 ஏப்ரல் 1946 (1946-04-22) (அகவை 77)

கோபாலகிருஷ்ண காந்தி (வங்காளம்: গোপালকৃষ্ণ গান্ধী ; ஆங்கிலம்: Gopalkrishno Gandhi; பிறப்பு: ஏப்ரல் 22, 1945) மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியின் மகன். தமிழக அரசியல் தலைவர் சி. ராஜகோபாலாச்சாரியின் மகள்வழி பேரன். இவர் அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய இராசமோகன் காந்தியின் தம்பி.

வாழ்க்கை சுருக்கம்[தொகு]

இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வான கோபாலகிருஷ்ண காந்தி, 1968-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு இந்தியத் துணை குடியரசுத் தலைவரின் செயலாளராகவும், இந்தியக் குடியரசுத் தலைவரின் இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கான இந்திய ஹைகமிசனராக நியமிக்கப்பட்டார். 2002 லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை நோர்வே நாட்டில் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

14 டிசம்பர் 2004 முதல் சூலை 2009 முடிய மேற்கு வங்காள மாநில ஆளுநராக பதவியில் இருந்தார். சென்னை கலா சேத்ரா அறக்கட்டளையின் தலைவராக 2011 - 2014-ம் ஆண்டு மே மாதம் முடிய பதவி வகித்தார். தற்சமயம் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் காந்தி பேரன் போட்டி?". Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபாலகிருஷ்ண_காந்தி&oldid=3583554" இலிருந்து மீள்விக்கப்பட்டது