உள்ளடக்கத்துக்குச் செல்

கோச்சராப் ஆசிரமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியச் சுதந்திர இயக்கத்தின் தலைவரான மோகன்தாஸ் காந்தியால் இந்தியாவின் தோற்றுவிக்கப்பட்ட முதல் ஆசிரமம் கோச்சராப் ஆசிரமமாகும் (Kochrab Ashram). இதனைக் காந்தியின் நண்பரான பாரிஸ்டர் ஜீவன்லால் தேசாய் பரிசாக அளித்தார்.[1] 1915ஆம் ஆண்டு மே 25ல் நிறுவப்பட்ட காந்தியின் கோச்சராப் ஆசிரமம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த ஆசிரமம் மாணவர்களுக்கு, காந்திய சிந்தனை, சத்தியாகிரகம், தன்னிறைவு, சுதேசி, ஏழைகள், பெண்கள் மற்றும் தீண்டத்தகாதவர்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றுவதற்கும், சிறந்த பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய மையமாக உள்ளது. மனித சமத்துவம், சுய உதவி மற்றும் எளிமை ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரமம் செயல்படுகிறது. ஆசிரமம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோச்சராப் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டதால், காந்தி தனது ஆசிரமத்தை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. எனவே அவர் சபர்மதி ஆற்றின் கரைக்கு ஆசிரமத்தினை மாற்றினார். சபர்மதி ஆசிரமம் மக்களின் குரலாகவும், நாட்டின் தலைவரின் குரலைப் பரப்புவதாகவும் அமைந்தது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோச்சராப்_ஆசிரமம்&oldid=3446859" இலிருந்து மீள்விக்கப்பட்டது