இராசமோகன் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இராசமோகன் காந்தி (ஆங்கிலம்: Rajmohan Gandhi, பிறப்பு 1935) வரலாற்று ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ஆவார். இவர் காந்தியின் மகன் வழிப் பெயரனும் இராசாசியின் மகள் வழிப் பெயரனும் ஆவார். சனநாயக உரிமைகளுக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் ஏற்றத் தாழ்வுகள் அகலவும் பாடுபடும் அறிஞர். இவரின் தந்தை தேவதாஸ் காந்தி (மகாத்மா காந்தியின் நான்காம் மகன்). இவரின் தாயார் லட்சுமி (இராசகோபாலச்சாரியின் மகள்) ஆவர். இராசமோகன் காந்தி தொடக்கக் காலத்தில் (1960-70) பூனாவுக்கு அருகில் மலையடிவாரத்தில் அறுபதெட்டு ஏக்கர் பரப்பில் 'ஆசிய பிளாட்டோ' என்னும் பெயரில் ஒரு பெரிய அமைப்பை உருவாக்கினார்.

பதவிகள்[தொகு]

 • இல்லினாயசு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
 • புதுதில்லியில் கொள்கை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியர்
 • தென்னாசிய மத்தியகீழை ஆய்வியல் நடுவம் என்னும் நிறுவனத்தில் ஆய்வுப் பேராசிரியர்
 • காந்தி நகர் ஐ.ஐ.டி யில் பேராசிரியர்
 • ஹிம்மத் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் (1964-1981)
 • இந்தியன் எக்சுபிரசு நாளிதழின் ஆசிரியர் (1985-1987)

நூல்கள்[தொகு]

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, வல்லபாய் படேல் வாழ்க்கை வரலாறு, இராசாசி வரலாறு கபார் கான் வரலாறு , பஞ்சாப் வரலாறு ஆகிய நூல்களும் இரண்டு புரட்சிகளின் கதை என்ற ஒரு நூலும் எழுதியிருக்கிறார். இராசகோபாலச்சாரி பற்றி எழுதிய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது இராசமோகனுக்கு 2002 ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது. தென்னிந்திய வரலாறு, முசுலிம்களின் மனங்களைப் புரிந்து கொள்ளல் இவர் எழுதிய நூல்கள்.

விருதுகள்[தொகு]

 • கால்கரி பல்கலைக்கழகத்தில் (கனடா) கௌரவ டாக்டர் பட்டம்.
 • ஓபிரின் பல்கலைக்கழகத்தில் (டோக்யோ) தத்துவத்திற்காக கௌரவ டாக்டர் பட்டம்
 • இராசாசியின் வாழ்க்கை வரலாற்று நூலுக்காக சாகித்திய அகாதமி விருது (2002)
 • பன்னாட்டு மனித நேய விருது (2004)
 • மகாத்மா காந்தி பற்றிய வரலாற்று நூலுக்கு 'பயனியல் விருது' இந்திய வரலாற்றுப் பேராயம் வழங்கியது (2007)

அரசியல் பணி[தொகு]

 • 1975-77 இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது சனநாயக உரிமைகளை மீட்டெடுக்கப் பாடுபட்டார்.
 • 1989 ஆம் ஆண்டில் அமேதி தொகுதியில் இராசீவ் காந்தியை எதிர்த்து மக்களவைக்குப் போட்டியிட்டார்.
 • 1990-1992 இல் மாநிலங்கள் அவை உறுப்பினராக இருந்தார்.
 • 1990இல் செனிவாவில் நடந்த ஐநா மனித உரிமை மாநாட்டுக்குச் செல்லும் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
 • தாழ்த்தப்பட்ட மலைச்சாதி மக்களின் துயர்களைத் தீர்க்க அனைத்துக் கட்சிகளின் கூட்டுக்குழுவை அமைத்தார்.
 • 2014 பெப்ரவரித் திங்களில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசமோகன்_காந்தி&oldid=2339226" இருந்து மீள்விக்கப்பட்டது