பஞ்ச்கனி
பஞ்ச்கனி Panchgani Paachgani | |
---|---|
மலைவாழிடம் | |
![]() பஞ்ச்கனி மலைகளின் தோற்றம் | |
ஆள்கூறுகள்: 17°55′30″N 73°48′00″E / 17.925°N 73.8°E | |
Country | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சாத்தாரா |
ஏற்றம் | 1,293 m (4,242 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 13,280 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 412805 |
பாஞ்ச்கனி (Panchgani, மராத்தியில்: पाचगणी) என்பது இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள சாத்தாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் நகராட்சி ஆகும். பஞ்ச்கனிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இது பல மாணவர் தங்கி பயிலக்கூடிய கல்வி நிறுவனங்களைக் கொண்டதற்காகவும் அறியப்படுகிறது. [1]
பஞ்ச்கனி புனேவிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
வரலாறு[தொகு]
1860 களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஜான் செசன் துரையின் மேற்பார்வையின் கீழ் கோடைகால ஓய்விடமாக பஞ்சகனி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் காலநிலை இதமானதாக இருந்ததால், பஞ்ச்கனி ஓய்வு பெறும் இடமாக உருவாக்கப்பட்டது. அவர் ருஸ்டோம்ஜி துபாசுடன் இந்த பிராந்தியத்தின் மலைகளை ஆய்வு செய்தார். இறுதியாக ஐந்து கிராமங்களைச் சுற்றியுள்ள இந்த பெயரற்ற பகுதியை வளர்த்தெடுக்க முடிவு செய்தார்: தண்டேகர், கோதாவலி, அம்ப்ரல், கிங்கர், தைகாட் என்னும் சிற்றூர்களுக்கு இடையே இருந்த இந்த இடம் "ஐந்து கிராமங்களுக்கு இடையே உள்ள நிலம்" என்று பொருள்படும் பஞ்சகனி என்று பெயரிடப்பட்டது, மேலும் செசன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இப்பகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, தையல்காரர்கள், வண்ணார், கசாப்புக் கடைக்காரர்கள், காய்கறி விற்பனையாளர்கள், கட்டட ஒப்பந்ததாரர்கள் போன்ற பல்வேறு தொழில் வல்லுநர்களையும் பஞ்ச்கனியில் குடியேற செசன் ஊக்குவித்தார். பசாருக்குக் கீழே உள்ள பகுதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இப்போது அது கௌதன் என்று அழைக்கப்படுகிறது. பாஞ்ச்கனியில் மலைச் சவுக்கு (சில்வர் ஓக்) மற்றும் பொய்ன் செட்டியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தாவர வகைகளை இங்கு நட்ட பெருமைக்குரியவர். செசன் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 1971 அல்லது 72 இல், பஞ்ச்கனியின் நிறுவனரை நினைவுகூரும் விழாவில் முதன்முறையாக, நகர மக்களும் பள்ளிகளும் ஒன்றாகக் கலந்து கொண்டபோது, அவரது நூறாவது நினைவு நாள் மிகப் பெரிய அளவில் அனுசரிக்கப்பட்டது.[சான்று தேவை]
உறைவிடப் பள்ளிகள்[தொகு]
19 ஆம் நூற்றாண்டில் பல்வேறு சமூகத்தினரால் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன, மேலும் பஞ்சகனி ஒரு கல்வி நகரமாக வளரத் தொடங்கியது.
1890 களில், கிம்மின்ஸ் உயர்நிலைப் பள்ளி ஐரோப்பிய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்காக தொடங்கப்பட்டது. 1902, ஆடவர் பிரிவு பிரிக்கபட்டு ஐரோப்பிய ஆடவர் உயர்நிலைப் பள்ளியாக மாறியது. தற்போது இது செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி, பஞ்ச்கனி என அழைக்கப்படுகிறது. மேலும் கிம்மின்ஸ் ஒரு பிரத்யேக மகளிர் பள்ளியாக மாறியது. 1895 ஆம் ஆண்டில், "டாட்டர்ஸ் ஆஃப் தி கிராஸ்" என்று அழைக்கப்படும் கன்னியாஸ்திரிகளின் ரோமன் கத்தோலிக்க வரிசை , பஞ்ச்கனி செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியைத் தொடங்கியது. மூன்று உறைவிடப் பள்ளிகளும் அந்தக் கால ஆங்கிலப் பொதுப் பள்ளிகளை மாதிரியாகக் கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றன. பள்ளி இறுதித் தேர்வுகள் திசம்பரில் நடைபெறும், வினாத்தாள்கள் இங்கிலாந்தில் இருந்து கடல் வழியாக அனுப்பப்படும். விடைத்தாள்கள் கடல் வழியாக திருப்பி அனுப்பப்பட்டு சூன் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
சிறிது காலம் கழித்து, பிறகு சமூகத்தினர் தங்கள் பள்ளிகளைத் தொடங்கினர். இந்தப் பள்ளிகள் பம்பாய் இராஜதானியின் மெட்ரிகுலேசன் தேர்வுடன் இணைக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் முதன்மையான பள்ளியான பார்சி பள்ளி, பின்னர் பில்லிமோரியா பள்ளியாக மாறியது. முஸ்லீம் பள்ளி யூனியன் உயர்நிலைப் பள்ளியாக மாறியது, இப்போது அஞ்சுமான்-I-இஸ்லாம் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பள்ளிகளும் ஆங்கில பொதுப் பள்ளிகளை மாதிரியாகக் கொண்டவை. இந்து உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது, இப்போது சஞ்சீவன் வித்யாலயா என்று அழைக்கப்படுகிறது. இது இரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் பகாய்களின் தேசிய ஆன்மீக அவை புதிய சகாப்த உயர்நிலைப் பள்ளியை நடத்துகிறது. பார்சி உயர்நிலைப் பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. எஸ்.எம். பாத்தா, எஸ். எம். பாத்தா பள்ளி, பஞ்ச்கனி சர்வதேசப் பள்ளி, இளநிலைக் கல்லூரி [2] ஆகியவற்றைத் தொடங்கினார்.
உடல்நல மீட்டக மையம்[தொகு]
தூய காற்று, புத்துணர்ச்சியூட்டும் தட்பவெப்பநிலை, போன்றவை பஞ்ச்கனியில் உள்ளதால் இது சுகவாழ்வுக்கு நல்ல இடமாக அமைந்தது. பம்பாயில் இருந்து நன்கு அறியப்பட்ட காச நோய் நிபுணரான மரு. ருஸ்டோம்ஜி போமன்ஜி பில்லிமோரியா 1940 களில் காசநோய் சிகிச்சைக்கான மையமாக பெல் ஏர் சானடோரியத்தை நிறுவினார். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் புழக்கத்துக்கு வரும் வரை, பம்பாய் இராசதானியில் காசநோய் சிகிச்சைக்கான முதன்மையான இடமாக டால்கீத் இருந்தது.
நிலவியல்[தொகு]
சயாத்ரி மலைத்தொடரில் ஐந்து மலைகளுக்கு நடுவில் பஞ்சகனி அமைந்துள்ளது. பஞ்சகனியைச் சுற்றி தண்டேகர், கிங்கர், கோதாவலி, அம்ப்ரல், தைகாட் என ஐந்து கிராமங்கள் உள்ளன. தோம் அணை கட்டப்பட்ட பள்ளத்தாக்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. இது வந்யிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ளது. பஞ்ச்கனியின் கிழக்கே வாய், பவ்தான் மற்றும் நாகேவாடி அணை, மேற்கில் குரேகர், தெற்கில் கிங்கர் மற்றும் ராஜ்புரி மற்றும் வடக்கே தோம் அணை போன்றவை உள்ளன.
பஞ்ச்கனியைச் சுற்றியுள்ள ஐந்து மலைகளின் உச்சியானது எரிமலை பீடபூமியாக உள்ளது. இது திபெத்திய பீடபூமிக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயர்ந்ததாகும். இந்த பீடபூமிகள், மாற்றுப் பெயரில் "டேபிள் லேண்ட்" என்று அழைக்கப்படுகின்றன. அவை தக்காணப் பீடபூமியின் ஒரு பகுதியாகும், இவை பூமித் தட்டுகளுக்கு இடையே உள்ள அழுத்தத்தால் மேலே உயர்நவை ஆகும். இப்பகுதியில் அதிக நில நடுக்கச் செயல்பாடுகள் உள்ளன. கொய்னாநகர் அருகே ஒரு நிலநடுக்க மையம் உள்ளது. அங்கு கொய்னாநகர் அணை மற்றும் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சிக்கல்கள்[தொகு]
அண்மைக் காலங்களில், கட்டுப்பாடில்லாத வணிக நடவடிக்கைகள், அதிகப்படியான போக்குவரத்து, நீர் சேமிப்புக்காக அருகில் கட்டப்பட்டுள்ள புதிய அணைகளின் வெப்பக்கிரம்மாறுகை ( ஈரப்பதத்தினால்) காரணமாக பாச்கனி சூழலியல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
வானிலை[தொகு]
பஞ்ச்கனியின் வெப்பநிலை குளிர்காலத்தில் சுமார் 12 டிகிரி செல்சியஸ் ஆகவும், கோடையில் சில சமயங்களில் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்; பருவமழை தவிர மற்ற காலங்களில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும். பருவ மழைக்காலம் சூன் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியாகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், பஞ்ச்கனி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23.9 (75) |
25.1 (77.2) |
28.9 (84) |
31.2 (88.2) |
31.3 (88.3) |
24.2 (75.6) |
20.7 (69.3) |
20.8 (69.4) |
21.3 (70.3) |
24.7 (76.5) |
23.2 (73.8) |
23.1 (73.6) |
24.87 (76.76) |
தாழ் சராசரி °C (°F) | 14.2 (57.6) |
15.3 (59.5) |
18.5 (65.3) |
20.6 (69.1) |
20.1 (68.2) |
17.2 (63) |
17.1 (62.8) |
16.4 (61.5) |
16.4 (61.5) |
17.3 (63.1) |
14.7 (58.5) |
13.9 (57) |
16.81 (62.26) |
பொழிவு mm (inches) | 4.1 (0.161) |
1.3 (0.051) |
4.8 (0.189) |
25.9 (1.02) |
43.9 (1.728) |
261.1 (10.28) |
697.2 (27.449) |
404.1 (15.909) |
221.5 (8.72) |
126.7 (4.988) |
66.0 (2.598) |
8.4 (0.331) |
1,865 (73.425) |
ஆதாரம்: Government of Maharashtra |
மக்கள்தொகையியல்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பஞ்ச்கனி நகரத்தின் மக்கள் தொகை 13,393 ஆகும். இதில் 6,974 ஆண்கள், 6,419 பேர் பெண்களாவர். [3] மக்கள் தொகையில் ஆண்கள் 52.07% மற்றும் பெண்கள், 47.93% உள்ளனர். [4] 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,368 ஆகும், இது நகர மக்கள் தொகையில் 10.21% ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தின் சராசரி பாலின விகிதமான 929 உடன் ஒப்பிடும்போது பஞ்ச்கனியின் பாலின விகிதம் 920 ஆக உள்ளது. பஞ்ச்கனியின் கல்வியறிவு விகிதம் 80.56% இதில் 84.6% ஆண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர், 76.16% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். பஞ்ச்கனியில் மொத்த மக்கள் தொகையில் 9.62% பட்டியலினத்தவர், 2.75% பட்டியல் பழங்குடியினர் உள்ளனர். [4]
கல்வி[தொகு]
பஞ்ச்கனி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நிறுவப்பட்ட உறைவிடப் பள்ளிகளுக்கு பெயர் பெற்றது. அவை அருகிலுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களைச் சேர்ந்த மாணவர்களை ஈர்ப்பதாக உள்ளன. பஞ்சகனியில் உள்ள பள்ளிகள்:
- கிம்மின்ஸ் உயர்நிலைப் பள்ளி [5]
- புனித பீட்டர் பள்ளி, பஞ்ச்கனி [6]
- புனித ஜோசப் கான்வென்ட் பள்ளி, பஞ்சகனி [7]
- பில்லிமோரியா பள்ளி [8]
- அஞ்சுமன்-ஐ-இஸ்லாம் பள்ளி [9]
- சஞ்சீவன் வித்யாலயா [10]
- நியூ எரா உயர்நிலைப் பள்ளி [11]
- எஸ். எம். பாத்தா உயர்நிலைப் பள்ளி [12]
- பஞ்சகனி சர்வதேச பள்ளி மற்றும் இளையோர் கல்லூரி [13]
பொருளாதாரம்[தொகு]

பஞ்சகனி மற்றும் மகாபலேசுவர் பகுதியில் ஸ்ட்ராபெர்ரிகள் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் ஸ்ட்ராபெர்ரிக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. [14]
சுற்றுலா இடங்கள்[தொகு]


- மேசை நிலம்: மேசை நிலம் (டேபிள் லேண்ட்) ஆசியாவின் இரண்டாவது நீளமான மலை பீடபூமி ஆகும். இது செம்புரைக்கல் பாறையால் ஆனது . இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1387 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மேசை நிலத்தில் ஒரு சிறிய ஏரி உள்ளது.
- சிட்னி முனை: இந்த காட்சி முனை கிருஷ்ணா பள்ளத்தாக்கை எதிர்கொள்ளும் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கிருந்து தோம் அணை, மற்றும் பாண்டவ்காட், மந்தர்தேயோ போன்றவற்றின் நீர்ப்பரப்பை காண இயலும். சிட்னியின் முனை பஞ்ச்கனி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது
- பார்சி முனை: இந்த முனை மகாபலேஷ்வரை நோக்கி அமைந்துள்ளது, மேலும் கிருஷ்ணா பள்ளத்தாக்கு மற்றும் தோம் அணையின் நீர்பரப்பைக் காணத்தக்கதாக உள்ளது.
- டெவில்ஸ் கிச்சன்: மேசை நிலத்தின் தெற்கே அமைந்துள்ள டெவில்ஸ் கிச்சன் அதனுடன் தொடர்புடைய தொன்மக் கதைகளைக் கொண்டுள்ளது: மகாபாரத இதிகாசக் கதை மாந்தர்களான பாண்டவர்கள் இங்கு சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. பாண்டவ்காட் குகைகள் (வாய்க்கு அருகில்) அப்போது அவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது
- மேப்ரோ தோட்டம்: மாப்ரோ தோட்டங்கள் என்பது ஸ்ட்ராபெரி விளைச்சலுக்குப் பெயர் பெற்ற தோட்ட பூங்கா ஆகும். இது மகாபலேஷ்வர் செல்லும் வழியில் உள்ள குரேகர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது உணவு பதப்படுத்தும் நிறுவனமான மாப்ரோவால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
பரவலர் பண்பாட்டில்[தொகு]
"மேசை நிலம்" ராஜா ஹிந்துஸ்தானி, மேளா, தாரே ஜமீன் பர், ஹம் தும்ஹரே ஹை சனம், ஏஜென்ட் வினோத் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தளமாக இருந்துள்ளது. பியார் கி யே ஏக் கஹானி என்ற தொலைக்காட்சி தொடர்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்[தொகு]
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்[தொகு]
- சதாரா தொடருந்து நிலையம் - 60 கி.மீ
- சாங்கிலி தொடருந்து நிலையம் - 160 கி.மீ
குறிப்புகள்[தொகு]
- ↑ "Panchgani". India: Puneri Travellers. 20 December 2014 இம் மூலத்தில் இருந்து 15 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161115135317/http://www.panchgani.ind.in/.
- ↑ "Panchgani international high school and Junior college| panchgani" (in en) இம் மூலத்தில் இருந்து 2021-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210810071151/https://www.panchganiinternationalschool.org/.
- ↑ "Census of India, 2011". 2020-01-16. https://www.censusindia2011.com/maharashtra/satara/mahabaleshwar/panchgani-m-cl-population.html.
- ↑ 4.0 4.1 "Census of India". https://www.censusindia2011.com/maharashtra/satara/mahabaleshwar/panchgani-m-cl-population.html.
- ↑ "Kimmins". http://kimminsschool.edu.in/.
- ↑ "St. Peter's School, Panchgani". http://peterspanchgani.org/.
- ↑ "St. Joseph's Convent School, Panchgani | Founded in 1895". https://sjcschoolpanchgani.org/.
- ↑ "Billimoria High School, Panchgani". http://billimoriahighschool.com/.
- ↑ "ANJUMAN ISLAM PUBLIC SCHOOL PANCHGANI". http://www.anjumanislampublicschool.in/.
- ↑ "Sanjeewan Vidyalaya". http://www.sanjeewanvidyalaya.org/.
- ↑ "New Era School Panchgani". https://www.nehsindia.org/.
- ↑ "Home page". www.smbatha.net. http://www.smbatha.net/.
- ↑ "Panchgani international high school and Junior college| panchgani" (in en) இம் மூலத்தில் இருந்து 2021-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210810071151/https://www.panchganiinternationalschool.org/.
- ↑ Joshi, Hrishikesh (14 May 2010). "Mahabaleshwar strawberry gets GI status". Business Standard. http://www.business-standard.com/article/economy-policy/mahabaleshwar-strawberry-gets-gi-status-110051400085_1.html.