பொய்ன் செட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொய்ன் செட்டியா
Weihnachtsstern - groß.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales
குடும்பம்: Euphorbiaceae
பேரினம்: Euphorbia
இனம்: E. pulcherrima
இருசொற் பெயரீடு
Euphorbia pulcherrima
Willd. ex Klotzsch

பொய்ன் செட்டியா ( poinsettia) என்பது ஸ்புர்க் குடும்பத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாவர இனமாகும். இவை மெக்சிகோவில் கண்டறியப்பட்ட தாவர இனமாகும். குறிப்பாக இவை இவற்றின் சிவப்பு நிற மற்றும் பச்சைநிற மலர்களுக்காக அறியப்படுகிறது. இவற்றின் மலர்கள் பரவலாக கிருஸ்துமஸ் விழாவில் காட்சிப்படுத்தப் படுகின்றன. இதன் ஆங்கிலப் பெயர் ஜோயல் ராபர்ட் பொய்ன்செட் என்திலிருந்து வந்தது. [3] இவர் மெக்சிகோவுக்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் தூதராவார்,[1] இவர்தான் ஐக்கிய அமெரிக்காவில் இந்த மலரை 1825 இல் அறிமுகப் படுத்தினார்.

வரலாறு[தொகு]

இந்த மலர் ஒரு காலத்தில் மெக்சிகோவில் காட்டு மலராக இருந்தது. இந்த மலரை ஜோயல் ராபர்ட் பொய்ன்செட் முதன்முதலில் தொட்டிகளில் வளர்த்து அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார். 1900 ஆண்டுக்குப்பின் ஐக்கிய அமெரிக்காவில் வணிகரீதியாக இத்தாவரம் பெருமளவில் வளர்க்க ஆரம்பித்தனர். இந்த மலர்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் இருந்தாலும் இதில் சிவப்பு நிற மலரையே கிருஸ்மசின்போது பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த மலரை கிருஸ்துமஸ் மலர் என்றும் செல்லமாக அழைப்பர். இந்த மலர்கள் மிகவும் சிறியவை என்றாலும் இதன் இலைகள் கண்ணைக் கவரும் வகையில் சிவப்பாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mexico". United States Department of State. November 30, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 17, 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்ன்_செட்டியா&oldid=2190944" இருந்து மீள்விக்கப்பட்டது