உள்ளடக்கத்துக்குச் செல்

நில நடுக்கவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நில நடுக்கவியல் (Seismology) நிலநடுக்கங்களையும் புவி அல்லது கோள் போன்ற பொருட்களின் ஊடாக மீட்சி அலைகள் பரவுவதையும் அறிவியல் சார்ந்து ஆயும் துறையாகும். இத்துறையில் ஆழிப்பேரலை போன்ற நிலநடுக்கம் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்கங்களும் நில நடுக்கங்களுக்கு மூலமான எரிமலைகள், புவித்தட்டுக்கள், பெருங்கடல், வானியல், செயற்கை செயற்பாடுகளும் ஆராயப்படுகின்றன. இதனுடன் தொடர்புடைய துறையாக நிலவியலைக் கொண்டு பழைய நிலநடுக்கங்களை குறித்த தகவலைப் பெறும் பண்டை நிலநடுக்கவியல் உள்ளது. புவிப்பரப்பின் நகர்வை நேரத்தின் செயலாற்றியாக பதியும் கருவி நிலநடுக்கப் பதிவி ஆகும். நில நடுக்கவியல் ஆய்வில் ஈடுபடும் அறிவியலாளர் நிலநடுக்கவியலாளர் எனப்படுகின்றார்.

குறிப்பிடத்தக்க நில நடுக்கவியலாளர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_நடுக்கவியல்&oldid=2021601" இலிருந்து மீள்விக்கப்பட்டது