இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர்
| வகை | Education and Research Institution |
|---|---|
| உருவாக்கம் | 2008 |
| பணிப்பாளர் | Sudhir K. Jain |
| அமைவிடம் | , , |
| Acronym | IIT GN |
| இணையதளம் | www.iitgn.ac.in |
இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் (இ.தொ.க. காந்திநகர், Indian Institute of Technology Gandhinagar,IIT Gn) குசராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்.2008-2009 கல்வியாண்டு முதல் காந்திநகரில் உள்ள விசுவகர்மா அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இ.தொக.மும்பை வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது.
கல்வி திட்டங்கள்
[தொகு]தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:
இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.