இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய தொழில்நுட்பக் கழகம்
புவனேசுவர்
நிறுவியது 2008
வகை கல்வி மற்றும் ஆய்வு கழகம்
இயக்குனர் பேரா.மதுசூதன் சக்ரவர்த்தி
ஆசிரியர்கள் 60
பட்டப்படிப்பு 240
அமைவிடம் புவனேசுவர், ஒரிசா இந்தியா
வளாகம் ஊரகம், 935 ஏக்கர்
இணையதளம் http://www.iitbbs.ac.in

இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர் (இ.தொ.க. புவனேசுவர்,Indian Institute of Technology, Bhubaneswar, IITBN) இந்திய மாநிலம் ஒரிசாவின் தலைநகர் புவனேசுவரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய அரசின் மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும். 2008-2009 கல்வியாண்டு கல்விதிட்டங்கள் இப்புதிய கழகத்தினை வளர்த்தெடுக்கும் வழிகாட்டியாக செயல்படும் இ.தொ.க கரக்பூர் வளாகத்தில் 23 ஜூலை 2008 அன்று துவங்கின.

வளாகம்[தொகு]

முதலாம் கல்வியாண்டில் இ.தொ.க கரக்பூர் வளாகத்தில் இயங்கிய இக்கழகம் இரண்டாம் ஆண்டில் (2009-2010) புவனேசுவரில் உள்ள இ.தொ.க கரக்பூரின் விரிவாக்க கிளையின் மேம்படுத்திய வளாகத்தில் இயங்குகிறது. நிரந்தர அமைவிடம் புவனேசுவரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள அர்குல் எனும் இடத்தில் அமையும். இதற்காக மாநில அரசு 935 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.[1].இந்தக் கழக அமைவிடத்தின் சுற்றுப்புறத்தில் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களும் அமைந்துள்ளன.[2].

தொடர்புகள்[தொகு]

ஒரிசா அரசு தேசிய நெடுஞ்சாலை 5 இலிருந்து ஓர் நான்கு வழிப்பாதையை இ.தொ.க வளாகத்திற்கு கட்டமைக்கிறது. கோர்டா தொடர்வண்டி நிலையம் 4 கி.மீ தொலைவில் உள்ளது. பிஜூ பட்நாயக் விமானநிலையம் 25 கி.மீ தொலைவில் உள்ளது. புதிதாக அமையவிருக்கும் பன்னாட்டு விமானதாவளம் 12 கி.மீ தொலைவில் இன்னும் அருகாமையில் அமையும்.


பள்ளிகள்[தொகு]

இ.தொக புவனேசுவரில் துறைகளாக இல்லாது முழுமையான பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு பள்ளிகளாக அமைக்கப்படும். உடனடியாக நிறுவப்படும் மூன்று பள்ளிகள்[3]:

மூலப்பொருள்கள் மற்றும் கனிம பொறியியல் பள்ளி[தொகு]

ஒரிசாவின் கனிம வளங்களை முழுமையும் பயன்படுத்த இப்பள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கடல் மற்றும் சூழலியல் அறிவியல் பள்ளி[தொகு]

பெருங்கடல் சார்ந்த அறிவியல், சூழலியல் மற்றும் பேரழிவு மேலாண்மை பற்றிய கல்வியும் ஆய்வுகளையும் இப்பள்ளி மேற்கொள்ளும்.

வேதியியல் மற்றும் உயிரிவேதியியல் பொறியியல் பள்ளி[தொகு]

இவை இ.தொ.க புவனேசுவரின் முதன்மை ஆய்வு களங்களாகும்.
கீழுள்ளவை படிப்படியாக நிறுவப்படும்.[4]

அடிப்படை அறிவியல் பள்ளி[தொகு]

இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரி அறிவியல் கல்வியில் பாடதிட்டங்களை வகுத்து செயலாற்றும்.

கட்டமைப்பு மேலாண்மை பள்ளி[தொகு]

கட்டிடங்கள்,வடிவமைப்பு,கட்டிடப் பொருளகள் ஆகியன இப்பள்ளியின் முதன்மை பொறுப்புகளாகும்.

கல்வி திட்டங்கள்[தொகு]

தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:

இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பட்டமேற்படிப்பு[தொகு]

2009ஆம் ஆண்டு முதல் இரண்டு பட்டமேற்படிப்பு திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

முனைவர் பாடதிட்டங்களுக்கும் 2009ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இ.தொ.க புவனேசுவர்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்" (PDF).
  2. "அர்குலின் அருகாமையில் இ.தொ.க புவனேசுவர்". 2009-05-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "இ.தொ.க புவனேசுவரில் மூன்று பள்ளிகள்".
  4. "பொருள்கள் வடிவாக்கமும் உருவாக்கமும் எங்கள் கொள்கை".

வெளி இணைப்புகள்[தொகு]