மூட் இண்டிகோ (கலைவிழா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூட் இண்டிகோ, இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையில் ஆண்டுதோறும் திசம்பர் மாதம் நடைபெறும் கலைவிழாவாகும். கல்லூரிகளிடையே புகழ்பெற்று வரும் இவ்விழாவிற்கு கடந்த ஆண்டு நாட்டின் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 60,000க்கும் கூடுதலான மாணவர்கள் பங்கெடுத்ததாக இதன் அலுவல்முறை இணையதளம் கூறுகிறது.[1]

1973ஆம் ஆண்டு சில ஆர்வமுள்ள இ.தொக மாணவர்களால் துவக்கப்பட்ட இவ்விழா ஆசியாவின் மிகப்பெரும் கல்லூரிவிழாவாக வளர்ந்துள்ளது.இவ்விழாவின்போது பல போட்டிகள்,பயிலரங்குகள்,கண்காட்சிகள்,கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

நிகழ்ச்சிகள்[தொகு]

போட்டிகள் பல துறைகளிலும்,(இசை,நாடகம்,இலக்கியம்,நடனம்,விவாதம் மற்றும் நுண்கலைகள்) நடத்தப்படுகின்றன.

சாக்லெட் தயாரிப்பிலிருந்து தற்காப்பு போர்முறைகள், மனவசியம், தட்டு நடனம் என பல பொருள்களில் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. கண்காட்சிப் பிரிவில் ஈருருளி சாகசங்கள், மணல் வடிவமைப்புகள், ரங்கோலி முதலிய துறைகளில் நடத்தப்பட்டுள்ளன.

சாகச விளையாட்டுகளாக ராப்பெல்லிங்(rappelling),சோர்பிங் (zorbing),வெப்பவளி பலூன் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கலைநிகழ்ச்சிகள் (Pronites) பல சிறந்த கலைஞர்களை வளாகத்திற்கு கொணர்ந்துள்ளது.

புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மூட் இண்டிகோ (2009-05-01). "மூட் இண்டிகோ". மூட் இண்டிகோ. பார்க்கப்பட்ட நாள் 2009-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட்_இண்டிகோ_(கலைவிழா)&oldid=3591257" இலிருந்து மீள்விக்கப்பட்டது