இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய தொழில்நுட்பக் கழகம்
இந்தூர்
IIT Indore Logo

குறிக்கோள்:ज्ञानम् सर्वजनहिताय
குறிக்கோள் ஆங்கிலத்தில்:Knowledge is for the well-being of everyone
நிறுவல்:2009
வகை:கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
இயக்குனர்:பிரதீப் மதுர
அமைவிடம்:இந்தூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
வளாகம்:525 ஏக்கர்கள் (2.1 km2)
நிறம்:Maroon, White and Black
இணையத்தளம்:http://www.iiti.ac.in

இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் (இ.தொ.க. இந்தூர், Indian Institute of Technology Indore ) மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சிம்ரோல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்படவிருந்து 2009 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இரு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்.


இக்கழக கட்டமைப்பிற்கான அடிக்கல்லை மனிதவள அமைச்சர் அர்ச்சுன்சிங் 17 பிப்ரவரி 2009 அன்று நாட்டினார்.[1] 525 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கிறது.இக்கட்டமைப்பு பயனுக்கு வரும்வரை 2009-2010 கல்வியாண்டு பாடங்கள் தேவிஅகில்யா விசுவவித்யாலயா வளாகத்தில் இ.தொக.மும்பை வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது.[2]

கல்வி திட்டங்கள்[தொகு]

தனது முதலாண்டில்,2009-2010, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:

ஒவ்வோரு பாடதிட்டத்திலும் 40 மாணவர்கள் முதலாண்டில் சேரவுள்ளனர்.

இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.


மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arjun Singh lays foundation of IIT in Indore". பார்த்த நாள் 2009-02-18.
  2. இ.தொ.க. இந்தூர் தகவல்



வெளியிணைப்புகள்[தொகு]