இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி
ஜனவரி '20: கிரிஃபோன் சிகரத்திலிருந்து ஐ.ஐ.டி மண்டி வளாகம்
குறிக்கோளுரைசிகரங்கள் ஏறுவோம்!
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Scaling the heights!
வகைதேசிய பல்கலைக் கழகம்/தேசிய தொழில் நுட்பக் கழகம்/ பொது பொறியியல் பள்ளி
உருவாக்கம்2009; 14 ஆண்டுகளுக்கு முன்னர் (2009)
தலைவர்பேராசிரியர் பிரேம் விராட்[1]
பணிப்பாளர்பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி[2]
கல்வி பணியாளர்
158[3]
அமைவிடம்
மண்டி
, ,
வளாகம்520 ஏக்கர்கள் (2.1 km2) பரப்பளவில், உல் ஆற்றங்கரையில் கமண்ட் கிராமத்தின் அருகில். மண்டி மாவட்டம் இமாசலப் பிரதேசம்
இணையதளம்www.iitmandi.ac.in

இந்திய தொழில்நுட்பக் கழகம், மண்டி (Indian Institute of Technology, Mandi) இமாசலப் பிரதேச மாநிலத்தில் மண்டி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சகத்தால் 2008ஆம் ஆண்டு புதிதாக நிறுவப்பட்ட எட்டு இ.தொ.கழகங்களில் இது ஒன்றாகும். இக்கழகம் 2009 ஆம் ஆண்டிலிருந்து செயல் பட்டு வருகிறது. துவக்கத்தில் இ.தொ.க மண்டிக்கு, இ.தொ.க ரூர்க்கி வழிகாட்டும் கழகமாக செயல் வகித்தது.[4] வகுப்புகள் 27 சூலை 2009 அன்று இ.தொ.க ரூர்க்கியில் தொடங்கின.

வரலாறு[தொகு]

தெற்கு வளாகத்தில் கட்டுமானம், டிசம்பர் '12
கிரிஃபன் சிகரத்திலிருந்து தெற்கு வளாகம், ஏப்ரல் '17
வடக்கு வளாகம், ஜூலை '19

பேராசிரியர் டிமதி கோன்ஸால்வஸ் நிறுவன பணிப்பாளராக 15 சனவரி 2010 ஆம் நாள் பதவி ஏற்றார். திரு ஆர். சீ, ஸானி முதல் பதிவாளராக பணி புரிந்தார். பேராசிரியர் கோன்ஸால்வஸ் பத்து வருடங்களுக்கு மேல் 30 சூன் 2020 வரை பணிப்பாளராக பணிபுரிந்தார். இ.தொ.க ரூர்க்கி யின் பணிப்பாளரான பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி 1 சூலை 2020 அன்று பணிப்பாளராக கூடுதல் பதவி ஏற்றார்.

ஏப்ரல் 12, 2012 அன்று, கட்டுமானத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் காமண்ட் வளாகத்தில் தரை உடைக்கும் விழா நடைபெற்றது. 25 ஏப்ரல் 2015 அன்று, ஐ.ஐ.டி மண்டி பி.ஐ.டெக்கை முழுமையாக மாற்றிய அனைத்து புதிய ஐ.ஐ.டி.களில் முதலாவதாக ஆனது. கமண்டில் அதன் நிரந்தர வளாகத்திற்கு மாணவர்கள்.[5]

வளாகம்[தொகு]

புது தில்லியிலிருந்து 460 கிலோமீட்டர் (290 மைல்) தொலைவில் உள்ள இமாசலப் பிரதேசத்தின் கமண்ட் கிராமத்தில் ஊல் ஆற்றின் கரையில் 510 ஏக்கர் (210 எக்டேர்) நிலத்தில் 2009 ஆம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்கியது இந்த இந்திய தொழில்நுட்ப கழகம். இந்த அமைதியான ஆனால் மலைகளும் சவால்களும் நிறைந்த இமயமலைப் பகுதியில் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான வளாகத்தை உருவாக்குவதற்கான செயல்களை விரைவில் மேற்கொண்டது.[6] இந்த வளாகம், வடக்கு வளாகம் என்றும் தெற்கு வளாகம் என்றும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது. மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக இவ்விரு வளாகங்களுக்கிடையே முறையான தகவல்தொடர்பு வசதியும், போக்குவரத்து வசதியும் உருவாக்கப்பட்டுள்ளன.

கல்வித் திட்டங்கள்[தொகு]

முதல் ஆண்டான 2009-2010 இல், இ.தொ.க. மண்டி மூன்று இளங்கலை பட்டப்படிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது:

ஒவ்வோரு பிரிவிலும் 40 மாணவர்கள் முதலாண்டில் சேர்ந்தனர்.

தற்போது இ.தொ.க. மண்டி பொறியியல், அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் பாடநெறி அடிப்படையிலும் மற்றும் ஆராய்ச்சி முறை அடிப்படையிலும் பட்டங்களை வழங்குகிறது.

சூரியகாந்தி விதைகளை உண்ணும் பராக்கீட், ஐ.ஐ.டி மண்டி

இளங்கலை பட்டப்படிப்பு திட்டங்கள்[தொகு]

தற்பொழுது (2019-20), இ.தொ.க. மண்டி இளங்கலை பட்டப்படிப்பை (B.Tech.) கீழ் காணும் ஆறு துறைகளில் நடத்துகிறது:

இ.தொ.க. மண்டி கீழ் காணும் துறையில் இரட்டைப் பட்டப்படிப்பு திட்டத்தையும் (B.Tech. – M.Tech.) வழங்குகிறது:

இளங்கலை படிப்பில் பெண்கள் சேர்க்கை[தொகு]

கண்டி பாஸில் பனியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மலையேறினர், ஜனவரி '20

2019–20 கல்வியாண்டில் இ. தொ. க. மண்டியில் இளங்கலை படிப்பிற்காக சேர்ந்த மாணவர்களில் பெண்களின் எண்ணிக்கை 20.22 விழுக்காடு ஆகும். இது 2019–20க்கான கூட்டு நுழைவுத் தேர்வு (JEE: ஜே.இ.இ) உச்ச வாரியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 17 சதவீதத்தை மீறி உள்ளது. [7] இளங்கலை பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மொத்தம் 262 மாணவர்கள் இ.தொ.க மண்டியில் சேர அனுமதி பெற்றார்கள். இவர்களில் 53 பேர் மாணவிகளும் மற்ற 209 பேர் மாணவர்கலளும் ஆவார்கள்.

அறிவியல் முதுகலைப் பட்டப்படிற்காக (M.Sc.) இந்த ஆண்டு மொத்தம் 103 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் பெண்கள், மிகுதி 67 பேர் ஆண்களும் ஆவார்கள். [8]

முதுகலை பட்டப்படிப்புத் திட்டங்கள்[தொகு]

இ. தொ. க. மண்டி முதுநிலை பட்டம் (ஆராய்ச்சி மூலம்) (M.S. (Research)), அறிவியல் முதுநிலை பட்டம் (M.Sc.), பொறியல் முதுநிலை பட்டம் (M.Tech.) மற்றும் முதுகலைப் பட்டம் (M.A.) போன்ற முதுகலை பட்டத் திட்டங்களையும் பல்வேறு துறைகளில் வழங்குகிறது.

இ.தொ.க. மண்டி பொறியியல், அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் ஆராய்ச்சி முறை அடிப்படையில் முனைவர் பட்டத்தையும் (Ph.D.) வழங்குகிறது.

ஆராய்ச்சி[தொகு]

இ தொ க மண்டி சமூகத்துற்கு பயனுள்ள புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சி சூழலை வளர்க்கிறது. இங்கு துறைகளைக் கலந்து செய்யும் ஆராய்ச்சிக்கு (interdisciplinary research) முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. முக்கிய ஆராய்ச்சிப் பிரிவுகள் (Thrust Areas) பிராந்தியத்தின் மற்றும் தேசத்தின் தேவைகளுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Board of Governors, IIT Mandi" இம் மூலத்தில் இருந்து 2020-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200818045358/https://iitmandi.ac.in/institute/bog.php. 
  2. "Meet Ajit K Chaturvedi, new director of IIT-Mandi" (in en). The Indian Express. 30 June 2020. https://indianexpress.com/article/education/meet-ajit-k-chaturvedi-new-director-of-iit-mandi-6483351/. 
  3. "மொத்த ஆசிரியர்கள்களின் எண்ணிக்கை". https://www.iitsystem.ac.in/?q=facultystas/view. 
  4. இ.தொ.க. மண்டி பற்றி அறிக்கை
  5. "IIT Mandi News Article" இம் மூலத்தில் இருந்து 2021-03-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210309145810/http://www.iitmandi.ac.in/news/articles/a5g4block.html. 
  6. "IIT-Mandi campus gets Environment go-ahead". http://archive.indianexpress.com/news/iitmandi-campus-gets-environment-goahead/787710/. 
  7. "IIT Mandi see a rise in Female Enrollment In B.Tech. Programmes". Hindustan Times. http://iitmandi.ac.in/Newspaper_reports/pdf_news/Hindustan%20Times%20-%20IIT%20Mandi.jpg. 
  8. "IIT Mandi enrols 20% female students in BTech programmes". Education Times. https://educationtimes.com/article/65779739/70464610/IIT-Mandi-enrols-20-female-students-in-BTech-programmes.html.