மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (இந்தியா)

ஆள்கூறுகள்: 13°00′51″N 80°12′18″E / 13.014196°N 80.205077°E / 13.014196; 80.205077
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1968
மாணவர்கள்10000
அமைவிடம்,
வளாகம்நகரம்
சேர்ப்புஅகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
இணையதளம்www.cipet.gov.in

மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET or Central Institute of Plastics Engineering and Technology) இந்திய அரசின், வேதியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சகத்தின், வேதியல் மற்றும் பெட்ரோலிய வேதியல் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பக் கழகமாக செயல்படுகிறது.[1][2]

1968ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைமையகம் (CIPET) சென்னையில் அமைந்துள்ளது. அகமதாபாத், அமிர்தசரச்ஸ், அவுரங்காபாத், போபால், புவனேசுவரம், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிப்பூர், ஹால்டியா, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து மையங்களிலும் உயர்தர பரிசோதனை கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.

படிப்புகள்[தொகு]

பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான மூன்றாண்டு பட்டயப் படிப்புகள், நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள், இரண்டாண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Central Institute of Plastics Engineering and Technology". CIPET. பார்க்கப்பட்ட நாள் 5 November 2012.
  2. "Satyam signs MoU with CIPET". The Hindu. Apr 3, 2008 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107061730/http://www.hindu.com/2008/04/03/stories/2008040350820200.htm. பார்த்த நாள்: 5 November 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]