இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் is located in இந்தியா
சென்னை
சென்னை
புது தில்லி
புது தில்லி
கவுகாத்தி
கவுகாத்தி
கான்பூர்
கான்பூர்
கோராக்பூர்
கோராக்பூர்
மும்பை
மும்பை
ரூர்கி
ரூர்கி
வாரணாசி
வாரணாசி
புவனேசுவர்
புவனேசுவர்
காந்திநகர்
காந்திநகர்
ஹைதராபாத்
ஹைதராபாத்
இந்தூர்
இந்தூர்
ஜோத்பூர்
ஜோத்பூர்
மாண்டி
மாண்டி
பாட்னா
பாட்னா
ரோபார்
ரோபார்
பாலக்காடு
பாலக்காடு
பாஞ்சிம்
பாஞ்சிம்
ராய்பூர்
ராய்பூர்
திருப்பதி
திருப்பதி
சம்மு
சம்மு
தான்பாத்
தான்பாத்
ஐ.ஐ.டி அமைவிடங்கள். 18 செயல்படும் ஐஐடி (பச்சை). 4 திட்டமிடப்பட்ட ஐஐடி (ஊதா)
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்
வகைபொதுப் பல்கலைகழகம்
அமைவிடம்இந்தியாவில் 18 இடங்களில்

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (இ. தொ. க) (Indian Institutes of Technology, IITs) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டு, நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்விநிலையங்கள். முதலில் இந்தியாவில் கரக்பூர், பம்பாய் (இப்பொழுது மும்பை), கான்ப்பூர், மதராசு (இப்பொழுது சென்னை), தில்லி ஆகிய ஐந்து இடங்களில் நிறுவப்பட்டன. இப்பொழுது இவை பதிமூன்று தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலையான பின்னர் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க இக் கழகங்கள் உருவாயின.இதனை உலக தரத்தில் உருவாக்க முதல் கல்வி அமைச்சரானஅபுல் கலாம் ஆசாத்அவர்களால் உருவாக்கப்பட்டது. பொதுவான பேச்சு மொழியில் இவை ஐ.ஐ.டி எனவும் இவற்றில் படித்தவர்கள் ஐ.ஐ.டியர் எனவும் விளிக்கப்படுகிறது.

இக் கழகங்கள் தொடங்கிய வரிசையில் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்: கரக்பூர் (1950; இ. தொ.கவாக 1951[1]), மும்பை (1958), சென்னை (1959), கான்பூர் (1959), தில்லி (1961; இ. தொ.கவாக 1963), குவகாத்தி (1994), ரூர்க்கி (1847; இ. தொ.க-வாக 2001), புவனேசுவர் (2008), காந்திநகர் (2008), ஐதராபாத் (2008), பட்னா (2008), பஞ்சாப் (2008) மற்றும் இராசத்தான் (2008).

இந்திய அரசு மேலும் மூன்று இ.தொ.கழகங்களை இந்தூர், மண்டி, மற்றும் (பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை மாற்றி) வாரணாசி ஆகிய இடங்களில் திறக்க அறிவித்துள்ளது. சில இ.தொ.கழகங்கள் யுனெசுக்கோ, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் கூட்டமைப்பு பண மற்றும் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இ.தொ.கவும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகம்; மற்றவற்றுடன் ஒரு பொது இ.தொ.க அவையால் இணைக்கப்பட்டுள்ளன. இவ் அவை ஆட்சிப் பொறுப்புகளை மேற்பார்வை இடுகின்றது.

இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மூலம் இவற்றின் பட்டப்படிப்பு நுழைவு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஏறத்தாழ 4000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டமேற்படிப்பிற்கான மாணவர்கள் மேற்கொள்ளவிருக்கும் துறையினைப் பொறுத்து பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE), JMET, JAM மற்றும் CEED மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டபடிப்பில் ஏறத்தாழ 15,500 மாணவர்களும் பட்டமேற்படிப்பில் 12,000 மாணவர்களும் இந்தக் கழகங்களில் படிக்கின்றனர். தவிர ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவரும் உள்ளனர். இ.தொ.க முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்களது பணி அமெரிக்க காங்கிரசினால் பாராட்டப்பட்டுள்ளது.[2]

பெயர் சுருக்கம் தொடங்கிய ஆண்டு நகரம் மாநிலம்/பிரதேசம்
தற்போதைய ஐஐடிகள்:
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் IITKGP 1951 கரக்பூர் மேற்கு வங்காளம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை IITB 1958 மும்பை மகாராட்டிரம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை IITM 1959 சென்னை தமிழ்நாடு
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் IITK 1959 கான்பூர் உத்தரப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி IITD 1963 புது தில்லி புது தில்லி
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி IITG 1994 குவஹாத்தி அசாம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி IITR 2001 ரூர்க்கி உத்தராகண்டம்
புதிய ஐஐடிகள்:
இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் IITRPR 2008 ருப்நகர் பஞ்சாப்
இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர் IITBBS 2008 புவனேசுவர் ஒடிசா
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் IITH 2008 ஐதராபாத் ஆந்திரப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் IITGN 2008 காந்தி நகர் குசராத்
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா IITP 2008 பட்னா பீகார்
இந்திய தொழில்நுட்பக் கழகம் இராச்சசுத்தான் IITJ 2008 சோத்பூர் இராச்சசுத்தான்
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி IIT Mandi 2009 மண்டி இமாசலப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் IITI 2009 இந்தோர் மத்தியப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி IITBHU 1916 வாரணாசி உத்தரப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் தன்பாத் IIT (ISM) 2015 இந்தோர் மத்தியப் பிரதேசம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு IIT-PKD 2015 பாலக்காடு கேரளா
இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதி IIT-TP 2015 திருப்பதி ஆந்திரப்பிரதேசம்

கலாச்சாரம் மற்றும் மாணவர் வாழ்க்கை[தொகு]

அனைத்து ஐஐடி மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளில் தான் தங்கவேண்டும் என்பது நிபந்தனை. அனைத்து ஐஐடி மாணவர்களும் தங்களது முதலாம் ஆண்டுகளில் தேசிய மாணவர்படை, தேசிய சேவை திட்டம் மற்றும் தேசிய விளையாட்டு அமைப்பு ஆகிய ஏதேனும் ஒன்றை தேர்ந்தேயாக வேண்டும்[3]. அனைத்து ஐஐடிக்களிலும் கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, டென்னிஸ், பேட்மின்டன், மற்றும் தடகள விளையாட்டு ஆகியவைக்கான மைதானம் அமைந்துள்ளது. மேலும் விடுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைந்துள்ளது.

கலாச்சார மற்றும் தொழில்நுட்ப திருவிழாக்கள்[தொகு]

இந்தியா முழுவதிலுமுள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்களில் நடைபெறும் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப திருவிழாக்களின் பட்டியல்.

கழகத்தின் பெயர் புகைப்படம் சுருக்கமாக அமைவிடம் மாநிலம் கலாச்சார திருவிழாக்கள் தொழில்நுட்ப திருவிழாக்கள்
பெயர் துவங்கிய நாள் பெயர் துவங்கிய நாள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி Electrical Engg Deptt IT-BHU.JPG IIT(BHU) வாரணாசி உத்தரப் பிரதேசம் க்ஷத்திரியா 1982 டெக்நெக்ஸ் 1939
இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர் IITBBS.jpg IITBBS புவனேசுவர் ஒடிசா அல்மா ஃபெஸ்தா 2009 விசநயர்Wissenaire 2010
இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை IITB மும்பை மகாராட்டிரம் மூது இந்திகோ 1971 டெக் ஃபெஸ்ட் 1998
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி Multi Storey Building, IITD.JPG IITD புது தில்லி புது தில்லி ரெந்தேசுவாஸ் 1976 த்ரைஸ்ட் 1992
இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் IIT GN.jpg IITGN காந்தி நகர் குசராத் பிலிதச்ரான் அமல்தியா 2010
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி IITG acad complex.jpg IITG குவஹாத்தி அசாம் அல்செரிங்கா 1996 டெக்னிச் 1999
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் Iith temp campus.jpg IITH ஐதராபாத் தெலுங்கானா இளான் 2009 ந'விஷன் 2011
இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் PACL Campus, IIT Indore.jpg IITI இந்தோர் மத்தியப் பிரதேசம் ஃப்ளுக்ஸ் 2011
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் IITKLibrary.jpg IITK கான்பூர் உத்தரப் பிரதேசம் [அந்தராகினி 1966 டெக்கிரித்திTechkriti 1995
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் IIT Kharagpur Main Building.JPG IITKGP கரக்பூர் மேற்கு வங்காளம் ஸ்பிரிங் ஃபெஸ்ட் 1960 க்சிதிஜி 2004
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை IITM சென்னை தமிழ்நாடு சாரங் 1974 சாஸ்த்ரா 2000
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி IIT Mandi மண்டி இமாசலப் பிரதேசம் எக்ஸோடியா 2012 எக்ஸோடியா 2012
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா Software Technology Park of India, Patna..jpg பட்னா பீகார் அன்வேசா 2009 அன்வேசா 2009
இந்திய தொழில்நுட்பக் கழகம் இராச்சசுத்தான் Iitjhostels.JPG IITJ சோத்பூர் இராச்சசுத்தான் இக்னஸ் 2009 தாக்சா 2009
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி Main(Administrative)Building IIT-Roorkee.JPG IITR ரூர்க்கி உத்தராகண்டம் தோம்சோ 1988க்கு முன்னர் Cognizance 2003
இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் IIT Ropar - Main Building of the Transit Campus.JPG IITRPR ருப்நகர் பஞ்சாப் செயிட்கெயிஸ்ட் 2010
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஜார்கண்ட் IIT-ISM தன்பாத் ஜார்கண்ட் 2015
இந்திய தொழில்நுட்பக் கழகம் கேரளா IIT-PKD பாலக்காடு கேரளா 2015
இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதி IIT-TP திருப்பதி ஆந்திரப்பிரதேசம் 2015

மேற்கோள்கள்[தொகு]

  1. "கழக வரலாறு – இந்திய தொழில்நுட்ப கழகம் கரக்பூர்". இ.தொ.க கரக்பூர். 22 அக்டோபர் 2008 அன்று பார்க்கப்பட்டது.
  2. லைப்ரரி, காங்கிரசு (26 ஏப்ரல் 2005). "அவை தீர்மானம் 227". Bill Text for the 109th Congress (2005–2006). The House of Representatives, U.S. 28 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 மே 2006 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு] Ordinance under R.27.0 NCC / NSO / NSS Requirements Archived சூன் 22, 2007 at the Wayback Machine.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]