அறிவியல் முதுகலைக்கு கூட்டுச் சேர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறிவியல் முதுகலைக்கு கூட்டு சேர்க்கை (JAM) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

அறிவியல் முதுகலைக்கு கூட்டுச் சேர்க்கை (Joint Admission Test for Masters) (JAM) என்பது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் முதுகலை அறிவியல் மற்றும் இளங்கலை அறிவியல் பட்டமேற்படிப்பு பாடத்திட்டங்களுக்கான சேர்க்கையை ஒருங்கிணைக்க 2004-2005 கல்வியாண்டில் இருந்து நடத்தும் தேர்வாகும். முதுகலை அறிவியல், முதுகலை-முனைவர் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் மற்றும் இளங்கலை அறிவியல் பட்டத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளும் பாடத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒரே தேர்வின் மூலம் சேர்க்கையை நடத்துவதும் அறிவியலை ஒரு பணிவிருப்பாக அறிவுத்திறனுள்ள மாணவர்களுக்கு கொண்டு செல்வதும் இத்தேர்வின் குறிக்கோள். நாளடைவில் இத்தேர்வு நாட்டின் பட்டப்படிப்பில் அறிவியல் கல்வித் தரத்தின் மட்டக்குறியீடாக விளங்கும்.

வெளியிணைப்புகள்[தொகு]