சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
வகை | இலாப நோக்கமற்ற தன்னாட்சி கல்வி நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1971 |
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | நகரம் |
இணையதளம் | mids.ac.in |
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies -MIDS) , இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இணைந்து நடத்தும், சமூக பொருளாதார மேம்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் கல்வி நிறுவனம் ஆகும். தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேம்பாட்டுத் துறையில் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.[1]
வரலாறு[தொகு]
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS), மால்கம் ஆதிசேசையா மற்றும் அவரது மனைவி எலிசெபத் ஆதிசேசையா ஆகியோரால் 1971ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. மால்கம் ஆதிசேசையா இதன் முதல் இயக்குனராக பொறுப்பேற்றார். 1977ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசுகள் கூட்டாக இணைந்து, இந்நிறுவனத்தை நடத்துகையில், 1978ஆம் ஆண்டில் மால்கம் ஆதிஷேயையா இதன் தலைவரானார். பின் போராசிரியர் சி. டி. குரியன் இதன் தலைவரானார். 2002ஆம் ஆண்டு முதல் இக்கல்விக் கழகம் தன்னாட்சி கொண்ட அமைப்பாக செயல்படுகிறது.
வழங்கும் கல்விகள்[தொகு]
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில், திட்டமிடல் மற்றும் வளர்ச்சி, மாநில – மத்திய அரசுகளுக்கான உறவுகள், பொருளாதாரப் பிரச்சனைகள், பசி, சமத்துவமற்ற தன்மை, சமூக இயக்கங்கள், சாதிய மற்றும் மதம் தொடர்பான அரசியல் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.[2]. முழு நேர முனைவர் பட்ட படிப்புகள் உள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ .
"MIDS - about us". http://www.mids.ac.in/. 21 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 Oct 2009 அன்று பார்க்கப்பட்டது. External link in
|publisher=
(உதவி) - ↑ http://www.eldis.org/go/home&id=4394&type=Organisation
- ↑ "Review of Development and Change". http://www.mids.ac.in/. 15 ஏப்ரல் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 Oct 2009 அன்று பார்க்கப்பட்டது. External link in
|publisher=
(உதவி)