சைலேஷ் ஜெ.மேத்தா மேலாண்மை பள்ளி
Appearance
வகை | மேலாண்மை கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1995 |
பணிப்பாளர் | பேரா. முனைவர். கருணா ஜைன் |
மாணவர்கள் | 150 |
அமைவிடம் | , , 19°07′58″N 72°54′55.27″E / 19.132906, 72.915264 |
வளாகம் | ஊரகம், வட மத்திய மும்பையின் 550 ஏக்கர்கள் (2.2 km2) பரப்பளவில் |
சுருக்கம் | எஸ்ஜேஎம்எஸ்ஓஎம் |
இணையதளம் | http://www.som.iitb.ac.in/ |
சைலேஷ் ஜே. மேத்தா மேலாண்மை பள்ளி (Shailesh J. Mehta School of Management, சுருக்கமாக SJMSOM அல்லது SOM) இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையின் வளாகத்தில் இயங்கும் ஓர் மேலாண்மை மற்றும் ஆய்வுக்கான பள்ளியாகும் இது 1995ஆம் ஆண்டு பல்துறைக் கல்வியை வளர்க்கும் முகமாகவும் விரைவாக மாறிவரும் வணிகச்சூழலைக் கருத்தில் கொண்டும் தொழில்நுட்பப் பின்னணி கொண்ட மேலாளர்களை மறுமலர்ச்சித் தலைவர்களாக வளர்க்கும் நோக்கத்துடனும் நிறுவப்பட்டது.[1]. இதொக மும்பையின் சீர்மிகு முன்னாள் மாணவரும் இந்தப் பள்ளி நிறுவப்பட நிதி உதவி செய்தவருமான முனைவர்.சைலேஷ் ஜே மேத்தாவின் நினைவாக 2000ஆம் ஆண்டில் தற்போதைய பெயர் வைக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவராக கருணா ஜைன் என்பவர் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-16. Retrieved 2011-07-10.