உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்

ஆள்கூறுகள்: 22°19′10.97″N 87°18′35.87″E / 22.3197139°N 87.3099639°E / 22.3197139; 87.3099639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தொழில்நுட்பக் கழகம்
(கரக்பூர்)
இ.தொக கரக்பூர் சின்னம்
இ.தொக கரக்பூர் சின்னம்

குறிக்கோளுரை யோக கர்மசு கௌசலம் (செயலில் சீர்மையே யோகா)
நிறுவியது 1951
வகை கல்வி மற்றும் ஆய்வு கழகம்
இயக்குனர் தாமோதர் ஆசார்யா
ஆசிரியர்கள் 470
பட்டப்படிப்பு 2,950
பட்டமேற்படிப்பு 2,400
அமைவிடம் கரக்பூர், மேற்கு வங்கம் இந்தியா
வளாகம் ஊரகம், 8.5 கிமீ² (2200 ஏக்கர்) வனப்பகுதி
இணையதளம் http://www.iitkgp.ac.in/

இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் (இ.தொ.க. கரக்பூர்,Indian Institute of Technology, Kharagpur, IIT KGP) 1951 ஆம் ஆண்டு இந்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கழகம் பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட, பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் முதலாவதாக நிறுவப்பட்டது. இ.தொ.க கரக்பூர் அறிவியல் மற்றும் நுட்பத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.[1]

வரலாறு

[தொகு]
இ.தொ.க கரக்பூரின் முதன்மை கட்டிடம்

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் முதலாவதான இக்கழகம் 1950 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரின் எஸ்பிளனேட் கிழக்குபகுதியில் நிறுவப்பட்டது. ஆகஸ்ட் 1951 ஆம் ஆண்டு கொலகொத்தாவிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ஃகிஜிலி,கரக்பூருக்கு இடம் பெயர்ந்தது. வகுப்பு அறைகள்,சோதனைக்கூடங்கள் மற்றும் ஆட்சிப்பொறுப்புகள் அலுவலகம் ஆங்கிலேயர் அரசியல் கைதிகளை சிறைவைத்து சித்திரவதை செய்த ஃகிஜிலி தடுப்புக்காவல் முகாம் (தற்போது சஃகித் பவன்) இருந்த கட்டிடத்தில் இயங்கின. இக்கழகத்திற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் "Indian Institute of Technology" என மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரிட்டார். இந்திய நாடாளுமன்றம் 15 செப்டம்பர் 1956 அன்று தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக சட்டம் இயற்றியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இந்தியா டுடே (2003-06-02). "இந்தியா டுடே: முதல் 10 கல்லூரிகள்- பொறியியல்". இந்தியா டுடே – ஜூன், 2003 இதழ் (இந்தியா டுடே) இம் மூலத்தில் இருந்து 2007-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070329141522/http://www.iitbombay.org/misc/press/indiatoday060203.htm. பார்த்த நாள்: 2006-05-14. 

மேலும் பார்க்க

[தொகு]
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


வெளியிணைப்புகள்

[தொகு]