மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா)
வகை | பதிவு பெற்ற நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1987 |
அமைவிடம் | , , 13°1′30″N 80°15′27″E / 13.02500°N 80.25750°E |
வளாகம் | ராஜா அண்ணாமலைபுரம், சென்னை |
சுருக்கப் பெயர் | CIBA |
இணையதளம் | CIBA |
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா) (The Central Institute of Brackishwater Aquaculture (CIBA), என்பது இந்தியாவில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆய்வை மேம்படுத்த, இந்திய நடுவண் அரசின் வேளாண்மை அமைச்சகத்தின், இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தால் (ICAR) சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆய்வுக் கழகமாகும்.[1]இக்கழகத்தின் தலைமையகம் ராஜா அண்ணாமலைபுரம், சென்னையிலும், ஆய்வு மையம், மேற்கு வங்காளத்தின் காக்தீப் என்ற இடத்திலும், கள ஆய்வு நிலையம், முட்டுக்காடு, சென்னையிலும் அமைந்துள்ளது.
சர்ச்சைகள்
[தொகு]மத்திய அரசாங்கம் தனது 103 தேசிய வேளாண் ஆராய்ச்சி மையங்களுள் ஒரே பயிருக்காக இருவேரு இடங்களில் செயல்படும் 43 நிறுவனங்களை மூட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது, இதில் தமிழ்நாட்டிலுள்ள மூன்று தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களை மூட உத்தேசித்துள்ளதாகவும் தெரிகிறது. சென்னையிலுள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தினை கொச்சியில் செயல்படும் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாகவும் நவம்பர் 2017ல் செய்தி வந்ததையடுத்து தமிழக விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Central Institute of Brackishwater Aquaculture (CIBA) | Chennai". Archived from the original on 2014-06-08. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.
- ↑ "தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- [1]
- CIBA profile and programs on YouTube
- Documentary about CIBA on YouTube
- Location map on Open street Map
- Reference on ASTI
- on Wikimapia
- Profile பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம்