வேதிப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செயலாக்க பொறியாளர்களின் வடிவமைப்பு, கட்டுமான மற்றும் செயல்படுத்த தொழிற்சாலை

வேதிப் பொறியியல் என்பது இயல் அறிவியல் மற்றும் வேதியியல் சார்ந்தவற்றோடு தொடர்புடைய ஒரு பொறியியல் துறையாகும். பலர் இதைத் தவறாக வேதியியலுடன் நேரடித் தொடர்புள்ளதாகக் கருதுவர். எனினும் வேதியியல் கூறுகள் வேதிப்பொறியியலின் ஒரு பகுதியே ஆகும்.

அறிமுகம்[தொகு]

இயற்பியல், வேதியியல், கணிதம் முதலியவற்றின் கருத்துகளைப் பயன்படுத்தி, நேரடியாகப் பயன்பாடற்ற மூலப்பொருள்களையோ அல்லது மூல வேதிப்பொருள்களையோ, முடிந்த வரையில் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி, விலைமதிப்புமிக்க, பயன்படுத்தக்கூடிய பொருள்களாக உருமாற்றுவது வேதிப்பொறியியலின் மூல நோக்கமாகும். இத்தோடு புதிய உத்திகள், புதிய தொழில்நுட்பஙகள், புதிய பொருள்கள் ஆகிவற்றைக் கண்டறிவதும் இத்துறையின் நோக்கத்தினுள் அடங்கும். முன்னது தொழில்முறைச் செயல்களை சார்ந்தது. பின்னது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைச் சார்ந்தது. இத்துறையில் பணிபுரிவோரை வேதிப் பொறியாளர் என அழைப்பர்.

வேதிப் பொறியியல் பெரும்பாலும், பல்வேறு பொருள்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகள், மற்றும் அதன் பராமரிப்பு போன்றவற்றோடு தொடர்புடையது. இதனுள் வேதிசார் தொழிற்சாலைகள் வடிமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவையும் அடங்கும். வேதிப் பொறியியலின் இந்தப் பிரிவில் பணிபுரிபவரை செயல்முறைசார் பொறியாளர்(Process Engineer) என வேதிப்பொறியியல் துறையில் அழைப்பர். வணிகநோக்கில் ஒரு பொருளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் போது அந்த பொருளைச் சார்ந்த வேதிவினைகளை மட்டுமல்லாது அதன் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல், மூலப்பொருள்களின் தன்மைகள், செயல்முறையின் செயல்திறன், அதற்கான செலவுகள் எனப் பல்முனைக்கூறுகளை ஆராய வேண்டும். இந்தச் செயலே வேதியியலையும் வேதிப் பொறியியலையும் வேறுபடுத்துகிறது. முன்னது ஆய்வுக்கூடத்தில் சிறிய அளவில் நடப்பது, பின்னது வணிகநோக்கில் தொழில்முறை சார்ந்து நடைபெறுவது.

பயன்பாடுகள்[தொகு]

வேதிப்பொறியியல் மிகப்பரந்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. காகிதம் (தாள்) தயாரிதல், நீர் தூய்மைப்படுத்தல், பல விதமான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்தல், பீங்கான், சுட்டாங்கல் (ceramic) தொடர்பான பொருள்களைத் தயாரித்தல், பெட்ரோலியம் தொடர்பான வேதியியல் தயாரிப்புகள், உழவார வேதிப்பொருள்கள், வேதிப்பொருள் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வெடிமருந்துகள், வாசனைப் பொருள்கள் (நறுமணமிகள்), சுவைக்கூட்டும் பொருள்கள், நிறமூட்டிகள் (நிறமிகள்), மருந்துகள், பிளாஸ்டிக் தயாரித்தல் என மிகப்பல பயன்துறைகளைக் கூறலாம்.

அண்மைக்காலமாக, வேதிப் பொறியியலாளர்கள் உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் பணி புரிகின்றனர். வேதிப் பொறியியலின் தாக்கம் உயிரித்தொழில்நுட்பத்திலும் காணப்படுகிறது. வேதிப் பொறியியலைச் சார்ந்து உயிர்வேதிப் பொறியியலும் தற்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாக விளங்குகிறது.

பிரிவுகள்[தொகு]

வேதிப்பொறியியல் கீழ்க்கண்ட அடிப்படைத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

 • Kister, Henry Z. (1992). Distillation Design (1st Edition ). McGraw-Hill. ISBN 0-07-034909-6. 
 • Green, Don W. and Perry, Robert H. (deceased) (1997). Perry's Chemical Engineers' Handbook (7th Edition ). McGraw-Hill. ISBN 0-07-049841-5. 
 • Bird, R.B., Stewart, W.E. and Lightfoot, E.N. (August 2001). Transport Phenomena (Second Edition ). John Wiley & Sons. ISBN 0-471-41077-2. 
 • McCabe, W., Smith, J. and Harriott, P. (2004). Unit Operations of Chemical Engineering (7th Edition ). McGraw Hill. ISBN 0-07-284823-5. 
 • Seader, J. D., and Henley, Ernest J. (1998). Separation Process Principles. New York: Wiley. ISBN 0-471-58626-9. 
 • Chopey, Nicholas P. (2004). Handbook of Chemical Engineering Calculations (3rdEdition ). McGraw-Hill. ISBN 0071362622. 
 • Himmelbau, David M. (1996). Basic Principles and Calculations in Chemical Engineering (6th Edition ). Prentice-Hall. ISBN 0133057984. 
 • Editors: Jacqueline I. Kroschwitz and Arza Seidel (2004). Kirk-Othmer Encyclopedia of Chemical Technology (5th Edition ). Hoboken, NJ: Wiley-Interscience. ISBN 0-471-48810-0. 
 • King, C.J. (1980). Separation Processes. McGraw Hill. ISBN 0-07-034612-7. 
 • Coulson J. M. ; Richardson J. F. ; Backhurst J. R. ; Harker J. H. (1991). Chemical engineering. Volume 2 : Particle technology and separation processes. Pergamon Press - New York. xxvi+968pp. 
 • Octave Levenspiel: The Chemical Reactor Omnibook, Osu, Oregon, 1993

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிப்_பொறியியல்&oldid=2144711" இருந்து மீள்விக்கப்பட்டது