உயிர்வினைகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்வினைகலன் (bioreactor) என்பது உயிரியலாக முனைப்பான சூழலைத் தாங்க உருவாக்கப்பட்ட ஏற்பாடு அல்லது அமைப்பாகும். [1] அடிப்படையில் இது உயிரிகள் அல்லது அவை உருவாக்கும் உயிர்வேதிப் பொருள்களின் வேதிச் செயல்முறை நிகழும் கலனாகும். உயிரி உயிரக வேட்பியாகவோ அல்லது உயிரக வெறுப்பியாகவோ அமையலாம். எனவே கலத்தில் நிகழும் வேதிச் செயல்முறை உயிரகச் சூழலிலோ உயிரகம் அற்ற சூழலிலோ நிகழலாம். இந்த வினைகலன்கள் உருளை வடிவில் சில இலிட்டர் முதல் பல பருமீட்டர் பருமனளவுடன் அமையலாம். பெரும்பாலும் இவை எஃகால் செய்யப்படுகின்றன.

மேலும் காண்க[தொகு]

உயிர்வேதிப் பொறியியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "bioreactor". Compendium of Chemical Terminology Internet edition.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்வினைகலன்&oldid=3950876" இலிருந்து மீள்விக்கப்பட்டது