பாய்ம இயக்கவியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாய்ம இயக்கவியல் (Fluid dynamics) என்பது நீர்ம (திரவ) அல்லது வளிமப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன, அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆயும் இயல்.
பாய்மம் என்பது நீர்மம், வளிமம் (வாயு) ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். ஒரு குழாய் வழியே உயர்ந்த அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்குப் நீர்மப் பொருளும், வளிமப் பொருளும் பாய்ந்து செல்வதால், இப்பொருட்களுக்குப் பாய்மம் என்று பெயர்.
பாய்ம இயக்கவியலை நீர்ம இயக்கவியல் (Hydro dynamics), வளிம இயக்கவியல் (Pneumatics) என இருவகைப்படுத்தலாம்.
வெளி இணைப்புகள்
[தொகு]