வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் | |
---|---|
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் | |
அமைவிடம் | வண்டியூர், மதுரை, தமிழ்நாடு - 625009 |
ஆள்கூறுகள் | 9°54′39″N 78°08′53″E / 9.9108°N 78.1481°E |
வகை | குளம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 1000 அடி |
அதிகபட்ச அகலம் | 950 அடி |
மேற்பரப்பளவு | 16 ஏக்கர் |
சராசரி ஆழம் | 29 அடி |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 188 மீட்டர் |
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்பது மதுரை மாநகரத்தில் வண்டியூர் பகுதியில் வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் அருகில் அமையப் பெற்றுள்ளது . இந்தத் தெப்பக்குளம் 304. 8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் 12 நீளமானப் படிக்கட்டுகளும், சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன்கூடிய விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு இணைப்பு உள்ளது.[1] இது தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளமாகும்.
வரலாறு
[தொகு]திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்காக வேண்டிய மணலை மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் இங்கு தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645ல்[2] தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார்.[3]
சிறப்புகள்
[தொகு]- இத்தெப்பம் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே, முக்குறுணிப் பிள்ளையார் என மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளார்.
- தைப்பூசத்தன்று இங்கு மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேஷ்வரருக்கும் தெப்பத்திருவிழா எடுக்கப்படுகிறது. வண்ணமயமான இந்தத் தெப்பத்திருவிழாவைக் காண அதிகமான மக்கள் மதுரை வருவார்கள்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madurai.org
- ↑ "வண்டியூர்". Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-28.
- ↑ தினமலர் தகவல்
- ↑ தெப்பத் திருவிழா