மதுரை (வடக்கு) வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மதுரை (வடக்கு) வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக மதுரை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 186 வருவாய்க் கிராமங்கள் உள்ளன[2]. இவ்வட்டத்தின் தலைமை அலுவலகம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தின் மக்கட்தொகை 4,93,838 ஆகவும், அதில் ஆண்கள் 2,48,437 ஆகவும், பெண்கள் 2,45,401 ஆகவும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 988 பெண்கள் உள்ளனர். கல்வி அறிவு 78.17 விழுக்காடாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள் எண்ணிக்கை 24,459 ஆகவும், பெண் குழந்தைகள் எண்ணிக்கை 23,016 ஆகவும் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_(வடக்கு)_வட்டம்&oldid=1710506" இருந்து மீள்விக்கப்பட்டது