காசிமார் பெரிய பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசிமார் பெரிய பள்ளிவாசல், மதுரை
பள்ளிவாசலினுள் அமைந்துள்ள மதுரை அசரத்தின் மக்பரா

காசிமார் பெரிய பள்ளிவாசல் அல்லது காசிமார் மசூதி என்பது மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான மசூதி ஆகும். இது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், மதுரை தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கு திசையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும்[1] மீனாட்சியம்மன் கோவிலிலிருந்து தென்மேற்கு திசையில் 800 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஓமானிலிருந்து வந்த அசரத்து காசி சையது தாசுத்தீனால் கூன் பாண்டியனிடமிருந்து[2] பெறப்பட்ட நிலத்தில் இம்மசூதி கட்டப்பட்டுள்ளது. இது மதுரை நகரின் முதல் மற்றும் தமிழகத்தின் பழமையான முசுலிம் வழிபாட்டிடங்களில் ஒன்றாக உள்ளது.[3][4] இது ஒரே நேரத்தில் 1200 நபர்கள் வரை தொழும் வசதிபடைத்தது.

மக்பரா[தொகு]

மதுரை மக்பரா, மதுரை அசரத்துகளான (அசரத்து மீர் அகமது இபுறாகீம், அசரத்து மீர் அம்சத்து இபுறாகீம் மற்றும் அசரத்து சையது அப்து சலாம் இபுறாகீம்) ஆகியோரின் தர்காக்களும் இதனுள் அமைந்துள்ளன.[5] காசி சையது தாசுத்தீன் வழித்தோன்றல்களில் பெரும்பாலானோர் இப்பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலே வசித்து வருகின்றனர் (காசிமார் தெரு). சையது தாசுத்தீன் சுல்தான்களின் காசியாக இருந்தார். அவரில் துவங்கி இன்றைய மதுரை மாநகர அரசாங்க காசி சையது காசா முயீனுத்தீன் வரை சையது தாசுத்தீன் அவர்களின் வழித்தோன்றல்களே தமிழ்நாடு அரசின் காசிகளாக நியமிக்கப்படுகின்றனர். அனைத்து சையதுகளும் சுன்னி இசுலாத்தின், ஹனபி பிரிவைச் சார்ந்தவர்கள்.பெரும்பாலானவர்கள் ஃபாஸிய்யா அஷ் ஷாதுலியா சூஃபி பிரிவை சார்ந்தவர்கள்.

மதரசா[தொகு]

இப்பள்ளியினுள் அடிப்படை அரபு கற்றுத்தரும் அசரத்து காசி சையது தாசுத்தீன் அரபி மதரசா செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 120 மாணவர்கள் வரை பயில்கின்றனர்

360 பாகை பார்வை[தொகு]

தமிழ் நாளிதழான தினமலர் வலைதளத்தில் இப்பள்ளியின் 360 பாகை பார்வை இடம் பெற்றுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

காசிமார் பள்ளிவாசல் மற்றும் மதுரை மக்பராவின் 360 பாகை பார்வை.

உசாத்துணைகள்[தொகு]

  1. http://www.dinamalar.com/360_view_detail.asp?id=407#top
  2. http://indica.co.in/kazimar-big-mosque
  3. சோக்கி, மெகர்தாது (2003). தென்னிந்திய முசுலிம் கட்டடக்கலைகள்: மலபார் சுல்தானகம் மற்றும் மலபார், கிழக்கு கடற்கரைகளில் குடியேற முசுலிம்களின் பழக்கவழக்கங்கள் (தமிழ்நாடு, கேரளா, கோவா) (ஆங்கிலம்). இண்டர் இந்தியா பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-30207-2. http://books.google.co.in/books?id=Ovxq8enmRKUC&pg=PA52. 
  4. http://www.etownmadurai.com/kazimar-big-mosque-and-maqbara[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-05-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)