திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்

ஆள்கூறுகள்: 9°49′28.22″N 77°58′54.21″E / 9.8245056°N 77.9817250°E / 9.8245056; 77.9817250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனாட்சி சொக்கநாதர் கோயில்
மீனாட்சி சொக்கநாதர் கோயில் is located in தமிழ் நாடு
மீனாட்சி சொக்கநாதர் கோயில்
மீனாட்சி சொக்கநாதர் கோயில்
தமிழ்நாட்டில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°49′28.22″N 77°58′54.21″E / 9.8245056°N 77.9817250°E / 9.8245056; 77.9817250
பெயர்
வேறு பெயர்(கள்):மீனாட்சியம்மன் கோயில்
பெயர்:திருமாங்கல்யபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவு:திருமங்கலம்
கோயில் தகவல்கள்
மூலவர்:சொக்கநாதர்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரைத் திருவிழா, மாசிமகம், மகாசிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழகத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் நகரில் அமைந்துள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இக்கோயிலின் இறைவி மீனாட்சி அம்மனும் இறைவன் சொக்கநாதரும் ஆவர். சிவபெருமானுக்கான கோவில்களில் இந்தக் கோயில் சிறப்புடைய ஒன்றாக கருதப்படுகிறது.

கோயில் வரலாறு[தொகு]

சிவபெருமான், மீனாட்சியை மணம் முடிப்பதற்காக கயிலையிலிருந்து மதுரை வந்தார். திருமணத்திற்காக தேவர்களும், பூதகணங்களும் சிவபெருமானிற்கு முன் மதுரை வந்தடைந்தனர். திருமணத்திற்கான தாலி செய்வதற்காக மதுரை நகரின் 18கிமீ. தெற்கிலுள்ள குண்டாற்றின் கரையோரம் ஒரு இடத்தை தெரிவு செய்தனர். அதற்கு முன்னர், ஈசனை வழிபட அவர்கள் விரும்பினர். அவர்களது விருப்பத்திற்கு இணங்கி, திருமணத்திற்கு முன்பே தம்பதி சமேதராய் மீனாட்சியுடன் சொக்கநாதரும் காட்சி தந்தார்[1]. பின்னர் வந்த இடைக்கால பாண்டியமன்னர்கள், இங்கு சுயம்புவாக கிடைத்த லிங்கத்தைக் கொண்டு கிழக்கு நோக்கி இக்கோயிலை எழுப்பினர்.

சான்றுகள்[தொகு]