திருமங்கலம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமங்கலம் வட்டம் 1868ன் மாதிரி வரைபடம்

திருமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக திருமங்கலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஆறு உள்வட்டகளும் 108 வருவாய் கிராமங்களும் இருந்தன.[2]

திருமங்கலம் வட்டத்தின் மூன்று உள்வட்டங்களைக் கொண்டு, புதிய கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[3]

தற்போதைய திருமங்கலம் வட்டத்தின் நிலப்பரப்புகள்[தொகு]

தற்போது திருமங்கலம் வருவாய் வட்டத்தில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 38 ஊராட்சிகள் மட்டும் உள்ளது. இவ்வட்டத்திலிருந்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், புதிதாக நிறுவப்பட்ட கள்ளிக்குடி வட்டத்தின் நிலப்பரப்பில் உள்ளது.

பருத்தி விவசாயம்[தொகு]

1600களில் மதுரை மாவட்டத்தின் 80 விழுக்காடு பருத்தி விவசாயம், திருமங்கலம் வட்டத்தில் மட்டுமே நடந்தது. கரிசல் மண் உறுதியாக இருந்ததாலும், முறையான பராமரித்தலினாலும் இந்தியாவின் மற்ற பருத்தியை விட திருமங்கலம் பருத்தியே அடர் வெள்ளை நிறமாக இருந்தது. இதனாலேயே திருமங்கலத்துப் பருத்திக்கு "தின்னிவெள்ளைப் பருத்தி" என்று பெயரும் உண்டு. கரிசல் மண்ணும் உறுதியாக இருந்ததால், உழுவதற்கான மாடுகள் அனைத்தும் மைசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விளைந்த பருத்தியை திருநெல்வேலியிலுள்ள பஞ்சு ஆலைக்கு எடுத்துச்சென்று விதையிலிருந்து சுத்தமான பஞ்சு பிரிக்கப்படும். பின்னர், மதுரையிலுள்ள ஹார்வே மில்'லிற்கு எடுத்து வந்து நூலாகத் திரிக்கப்பட்டு ஆண்டிற்கு 1200 டன் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சின் வெள்ளை நிறத்தின் காரணமாக, பருத்தியின் விலையும் உட்சத்தைத் தொட்டது. 1877ல் திருமங்கலத்தில் ஏற்பட்ட பெருமழை மற்றும் குண்டாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், அதற்கு அடுத்தாற் போல் வந்த வறட்சியின் காரணமாக பருத்தி விவசாயம் கைவிடப்பட்டது[4].

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமங்கலம்_வட்டம்&oldid=2578250" இருந்து மீள்விக்கப்பட்டது