மாட்டுத்தாவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாட்டுத்தாவணி (Mattuthavani) என்பது மாடுகளையும் கன்றுகளையும் விற்பதற்கான ஒரு கால்நடைச் சந்தையாக விளங்கிய பகுதியாகும். பொதுவாகக் கால்நடைகளைக் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைத்திருக்கும் இடத்தைத் தாவணி என்றும் மாட்டுச்சந்தை என்றும் சொல்கிறார்கள். [1] இப்பகுதி முன்பு மதுரை மாநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது. பின்னர் மதுரை மாநகரத்துடன் இணைக்கப்பட்டு, மதுரை மாநகரிலிருந்த நான்கு பேருந்து நிலையங்களையும் ஒருங்கிணைத்து, மதுரை எம்.ஜி.ஆர். (மாநகராட்சி ஒருங்கிணைந்த) பேருந்து நிலையம், மலர் சந்தை, காய்கறிச் சந்தை ஆகியவற்றைத் தொடங்கியுள்ளனர்.

மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்[தொகு]

இங்குள்ள மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (MIBT) ஐ.எசு.ஓ. தரச் சான்றிதழ் 9001:2000 பெற்றது. இந்நிலையம் 10 கோடி உரூபாய் செலவில் கட்டப்பட்டது.[2]இப்பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டு வருகிறது.

நடைமேடை சேருமிடம்
1 சென்னை, பெங்களூர், மைசூர், திருப்பதி, கொச்சி, திருவனந்தபுரம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலகம், கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகக அலுவலகம் மற்றும் இதர மாநில போக்குவரத்துக் கழக அலுவலகங்கள்.
2 திருச்சிராப்பள்ளி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்
3 சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை
4 காரைக்குடி, தேவக்கோட்டை, மேலூர்
5 இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, அருப்புக்கோட்டை
6 இராசபாளையம், தென்காசி, திருவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம், கடையநல்லூர்
7 தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், விளாத்திகுளம்
8 திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர்

மத்தியக் காய்கறிச் சந்தை[தொகு]

மதுரை நகரின் வடக்கு ஆவணிமூல வீதியில் இருந்த காய்கறிச் சந்தைப் பயன்பாட்டால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மாட்டுத்தாவணிப் பகுதியில் புதிதாக மத்தியக் காய்கறிச் சந்தை ஒன்று அமைக்கப்பட்டது. இச்சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகின்றன.

மலர் சந்தை[தொகு]

மதுரை மாநகருக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகை மலருடன் பிற மலர்களையும் ஒருசேர விற்பனை செய்யக் கூடிய மலர்ச் சந்தை ஒன்றும் மாட்டுத்தாவணிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மதுரை, தேனி மற்றும் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான மலர்களும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. இணைய அகர முதலி விளக்கம்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டுத்தாவணி&oldid=3853480" இலிருந்து மீள்விக்கப்பட்டது