நாங்குநேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாங்குநேரி
நாங்குநேரி
இருப்பிடம்: நாங்குநேரி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°29′45″N 77°38′47″E / 8.495833°N 77.646389°E / 8.495833; 77.646389ஆள்கூறுகள்: 8°29′45″N 77°38′47″E / 8.495833°N 77.646389°E / 8.495833; 77.646389
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி
சட்டமன்ற உறுப்பினர்

ரூபி ஆர். மனோகரன் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

6,640 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

17.28 சதுர கிலோமீட்டர்கள் (6.67 sq mi)

124 மீட்டர்கள் (407 ft)

இணையதளம் www.townpanchayat.in/nanguneri


நாங்குநேரி (ஆங்கிலம்:Nanguneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இவ்வூர் வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம், பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இந்த திவ்ய தேசத்தை சிரிவரமங்கை நகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அருகமைந்த ஊர்கள்[தொகு]

நாங்குநேரி பேரூராட்சிக்கு கிழக்கே திசையன்விளை (25 கி.மீ.); மேற்கில் களக்காடு (16 கி.மீ.); வடக்கே திருநெல்வேலி (29 கி.மீ.); தெற்கே வள்ளியூர் (13 கி.மீ.) தொலைவிலும் உள்ளது. நாங்குநேரி அருகில் (2 கி.மீ.) தொலைவில் மறுகால் குறிச்சி உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

17.28 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 66 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1753 வீடுகளும், 6640 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

கோயில்கள்[தொகு]

நாங்குநேரி பொருளாதார மண்டலம்[தொகு]

நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடம் இப்பொருளாதார மண்டலத்திற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான மடத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்குத் தந்தது.[8][9]இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமான நாங்குநேரி பலதுறை சார்ந்த உயர் தொழில் நுட்ப பூங்கா திட்டம் அமைக்கப்பட்டும், அரசால் செயல்படுத்தப்படவில்லை.[10][11]

ஊர் பெயர் காரணம்[தொகு]

ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.[12]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°29′N 77°40′E / 8.48°N 77.67°E / 8.48; 77.67 ஆகும்.[13] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141 மீட்டர் (462 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. பேரூராட்சியின் இணையதளம்
 5. நாங்குநேரி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
 6. Nanguner Population Census 2011
 7. Nanguneri Town Panchayat
 8. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vanamamalai-jeer-passes-away/article5964979.ece
 9. http://newstodaynet.com/tamil-nadu/jaya-condoles-death-jeer[தொடர்பிழந்த இணைப்பு]
 10. http://business.mapsofindia.com/sez/india/nanguneri-special-economic.html
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-06-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-12 அன்று பார்க்கப்பட்டது.
 12. "பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு". தினமணி. 15 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Nanguneri". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாங்குநேரி&oldid=3683613" இருந்து மீள்விக்கப்பட்டது