வீரவநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீரவநல்லூர்
வீரவநல்லூர்
இருப்பிடம்: வீரவநல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°54′N 77°55′E / 8.9°N 77.92°E / 8.9; 77.92ஆள்கூற்று: 8°54′N 77°55′E / 8.9°N 77.92°E / 8.9; 77.92
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

19,585 (2011)

2,145/km2 (5,556/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.13 சதுர கிலோமீட்டர்கள் (3.53 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/veeravanallur

வீரவநல்லூர் (ஆங்கிலம்:Veeravanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான திருப்புடைமருதூர் - சேரன்மகாதேவி இடையில் வீரவநல்லூர் அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 39 கிமீ; தென்காசியிலிருந்து 40 கிமீ; ஆலங்குளத்திலிருந்து 40 கிமீ; களக்காட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

9.13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 129 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 19585 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

கோயில்கள்[தொகு]

பூமிநாத சுவாமி கோயில்[தொகு]

வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான்.

இந்தக் கோயிலுக்கு நெல்லை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம்.

வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்[தொகு]

வீரவநல்லூரில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது.

வீரவநல்லூர் திரௌபதை அம்மன் திருக்கோயில்[தொகு]

திரொபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

புகழ்பெற்றவர்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

உயர் நிலை பள்ளிகள்[தொகு]

 • பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி (முந்தய பெயர் : இந்து உயர்நிலை பள்ளி). Pudhiya pallikoodam
 • செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி

நடுநிலைப்பள்ளிகள்[தொகு]

 • ஆர். சி. நடுநிலைப்பள்ளி
 • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
 • திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி

தொடக்கப் பள்ளிகள்[தொகு]

 • இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
 • TDTA தொடக்கப் பள்ளி
 • சகாயம் லூர்து அந்தோணி தொடக்கப்பள்ளி

கல்லூரிகள்[தொகு]

 • செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. வீரவநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
 4. வீரவநல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
 5. Veeravanallur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரவநல்லூர்&oldid=2759905" இருந்து மீள்விக்கப்பட்டது