நெல்லை ஏர்வாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏர்வாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஏர்வாடி
ஏர்வாடி
இருப்பிடம்: ஏர்வாடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°26′45″N 77°36′17″E / 8.44583°N 77.60472°E / 8.44583; 77.60472ஆள்கூற்று: 8°26′45″N 77°36′17″E / 8.44583°N 77.60472°E / 8.44583; 77.60472
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர் எம் ஏ ஆசாத்
மக்கள் தொகை 14 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

ஏர்வாடி (ஆங்கிலம்:Eruvadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் ஏர் உழும்போது பாடிக்கொண்டு உழுததால் ஏர்பாடி என்பது ஏர்வாடியாக மருவியது என்பர். ஏர்வாடி என்னும் இந்த சொல் "ஏர்" "கலப்பை" என்னும் என்னும் சொல்லில் இருந்தது வந்தது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,067 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<http://www.census2011.co.in/data/town/803875-eruvadi-tamil-nadu.html 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஏர்வாடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஏர்வாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் நடுவே நம்பி ஆறு பாய்கிறது. தற்பொழுது உள்ள தட்ப வெட்ப காரணங்களினால் ஆற்றில் நீர் வற்றி காணபடுகிறது.

திருநெல்வேலி நகரத்தில் இருந்து ஏறத்தாள 38 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளியூரில் ரயில் நிலையம் ஏர்வாடி மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையமாக இருகின்றது. சாலை வழியாக ஏர்வாடி சென்னையுடனும் (670 கிலோ மீட்டர்), மதுரையுடனும்(205 கிலோ மீட்டர்) இன்னும் இன்ன பிற நகரங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வூரின் அருகாமையில் உள்ள விமான நிலையம் 125 கிலோ மீட்டர் தொலைவில் திருவனந்தபுறத்தில் இருகின்றது.

கல்வி[தொகு]

ஏர்வாடி பேரூராட்சியில் பல்வேறு பள்ளிகளின் விவரம்.

மெட்ரிகுலேசன் பள்ளிகள்:

 • இராணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • அல்-ஹுதா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
 • அன்னை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி

அரசு பள்ளிகள்:

 • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
 • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
 • அரசு நடுநிலைப் பள்ளி
 • அரசு தொடக்கப் பள்ளிகள் 2

விளையாட்டு[தொகு]

இங்கு பலதரப்பட்ட விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானவை கிரிக்கெட் மற்றும் கைபந்து. கைபந்து விளையாட்டை இவர்களது ஊர் விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இது போக கிராமத்து விளையாட்டுகளான கில்லி, கோலி, பம்பரம், கபடி ஆகியவை இந்த ஊர் சிறுவர்களிடையே பிரசித்தம். கில்லி விளையாட்டினை இவ்வூரில் குச்சி-கம்பு என்று அழைப்பார்கள்.

வழிபாட்டு தலங்கள்[தொகு]

ஏர்வாடி முஸ்லிம், இந்து, கிறித்தவ மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கான வழிபாட்டு தலங்கள் உள்ளன.

மசூதிகள்[தொகு]

ஏர்வாடியில் உள்ள மசூதிகளில்

 • மேல முஹல்லம் ஜும்மா பள்ளிவாசல்
 • நடு முகல்லம் பீர் சாஹிப் பள்ளிவாசல்
 • கீழ முகல்லம் பள்ளிவாசல்
 • பைத்துஸ்ஸலாம் பள்ளிவாசல்
 • முஹைதீன் பள்ளிவாசல் மற்றும்
 • லெப்பைவளவு முகாம் பள்ளிவாசல்
 • மெயின் ரோடு பள்ளிவாசல் பிரசித்தி பெற்றவை.

இது போக சிறிய பள்ளிவாசல்களும், தர்காகளும் இருக்கின்றன. வருடம் ஒரு முறை கந்தூரிகளும் சந்தன கூடு திருவிழாவும் நடைபெறுவது உண்டு.

கோவில்கள்[தொகு]

பெருமாள் கோவில் திருகுரங்குடி - ஏர்வாடி பாதையில் அமைந்து இருக்கின்றது. இது போக ஹரிஹர சாஸ்த கோவிலும் பெரியநாயகி அம்மன் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த அம்மன் கோயில் உள்ளது. சந்தன மாரி முப்பிடாதி உச்சினிமாளி ஆகிய மூன்று சக்தி வாய்ந்த தெய்வங்கள் உள்ளன

தேவாலயங்கள்[தொகு]

ஏர்வாடியில் புனித ஜோசப் தேவாலயம் பிரசித்தம்.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லை_ஏர்வாடி&oldid=2157475" இருந்து மீள்விக்கப்பட்டது