மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°56′38″N 78°09′22″E / 9.9439°N 78.1561°E / 9.9439; 78.1561
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஜி. ஆர் பேருந்து நிலையம்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்மதுரை - மேலூர் நெடுஞ்சாலை
ஆள்கூறுகள்9°56′38″N 78°09′22″E / 9.9439°N 78.1561°E / 9.9439; 78.1561
உரிமம்மதுரை மாநகராட்சி
நடைமேடை8 (96 தடங்கள்)
கட்டமைப்பு
தரிப்பிடம்ஆம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMAD (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்)
MRI (கருநாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்)
வரலாறு
திறக்கப்பட்டதுமே 26, 1999; 24 ஆண்டுகள் முன்னர் (1999-05-26)[1]
முந்தைய பெயர்கள்மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
போக்குவரத்து
பயணிகள் 70,000 ஒரு நாளைக்கு

எம். ஜி. ஆர். பேருந்து நிலையம் (M.G.R. Bus Stand) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை நகரப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் பொதுவாக மாட்டுத்தாவணி என மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதி

மதுரை நகரில் பெருகிய போக்குவரத்து நெரிசலின் காரணமாக, மதுரை நகருக்குள் இருந்த மூன்று பேருந்து முனையங்களுக்கு மாற்றாக ஒரு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அமைக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்து மாட்டுத்தாவணி அமைக்கப்பட்டது. பின் சுற்றுச்சாலைத் திட்டம் மூலம் அனைத்து முனையங்களும் மாட்டுத்தாவணியுடன் இணைக்கப்பட்டன. இப்பேருந்து நிலையம் 10 கோடி செலவில், சுமார் 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

இந்தப் பேருந்து நிலையம் மாடுகள் விற்பனை செய்யப்படும் பகுதியாக இருந்த மாட்டுத் தாவணி என்கிற பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால், மதுரையில் இருப்பவர்களும், அடிக்கடி மதுரை வந்து செல்பவர்களும் இந்தப் பேருந்து நிலையத்தை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்கிற பெயராலேயே அழைக்கின்றனர். மதுரையில் பேச்சு வழக்கத்தில் உள்ள இந்தப் பெயரே அனைவராலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சேவைகள்[தொகு]

ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் மாதிரி படம்

மதுரையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பேருந்து நிலையம் எட்டு நடைமேடைகளுடன், நடைமேடைக்கு பன்னிரண்டு தடங்களில் அதிக அளவு பேருந்துகளைக் கையாளக்கூடியதாக உள்ளது.[2] இப்பேருந்து நிலையத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் கருநாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன.[3][4][5]

நடைமேடை பேருந்து வழித்தடம்
1 சென்னை, கடலூர், நெய்வேலி , சிதம்பரம், பெங்களூரு, மைசூர், திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பிற மாநிலங்களுக்கான பேருந்துகள் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்)
2 திருச்சிராப்பள்ளி,திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர்
3 சிவகங்கை, தோண்டி, கொட்டைபட்டினம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கர்நாடக பேருந்துகள்
4 காரைக்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, தேவகோட்டை, மேலூர், அறந்தாங்கி, பட்டுகோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புணரி
5 ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி, கீழக்கரை
6 ராசபாளையம், தென்காசி, செங்கோட்டை,திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம் மற்றும் கடையநல்லூர்
7 அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் விளாத்திகுளம்
8 திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, களியக்காவிளை, வள்ளியூர் மற்றும் கேரள மாநிலப் பேருந்துகள்.

அதிக போக்குவரத்து நெரிசலின் காரணமாக தனியார் ஓம்னி பேருந்து முனையம் புதிதாக அமைக்கபட்டுள்ளது.[6][7]

மதுரை இருந்து சென்னை, கோயமுத்தூர், மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, திருப்பூர், அவிநாசி, அன்னூர், பல்லடம், தாராபுரம், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம், ஓமலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல், கொடுமுடி, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், வடலூர், விருத்தசாலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, நீடாமங்கலம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, திருமயம், சிங்கம்புணரி, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, தொண்டி, சிவகங்கை, காளையார்கோவில், இடையாங்குடி, தேனி, போடி, உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், சின்னமனூர், கம்பம், கூடலூர், குமுளி, பெரியகுளம், வத்தலகுண்டு, கொடைக்கானல், திண்டுக்கல், நத்தம், மணப்பாறை, விராலிமலை, ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, எட்டையபுரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, மூணார், கோட்டயம், எர்னாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, மைசூர், மடிக்கேரி, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.

பயணியர் வசதிகள்[தொகு]

  • பயணச் சீட்டு வழங்குமிடங்கள் (SETC, TNSTC, KSRTC)
  • உணவகம் மற்றும சிற்றுண்டிக் கடைகள்
  • இருக்கை வசதி.[8]
  • தானியங்கி பணம் வழங்கும் கருவி (ATM).[9]
  • கழிப்பறை மற்றும் ஓய்வறை (இலவசம் மற்றும் கட்டணம்)
  • வண்டிகள் நிறுத்துமிடம்.[10]
  • வாடகை வண்டிகள்.[11][7]
  • காவல்துறை வெளிச் சாவடி. (Police out post)[12]
  • உரிமம் பெற்ற பூ வணிகர்கள்.[13]
  • மருத்துவ உதவிக் குழு.[14]

படக்காட்சியகம்[தொகு]

பேருந்து நிலையத்தின் உள்ளமைப்பு
எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்
மாட்டுதாவணி பேருந்து நிலையத்தின் மூன்றாவது நடைமேடை
எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mattuthavani bus stand traders down shutters". தி இந்து. 8 December 2004 இம் மூலத்தில் இருந்து 20 டிசம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041220235432/http://www.hindu.com/2004/12/08/stories/2004120813200300.htm. பார்த்த நாள்: 26 January 2014. 
  2. S. Sundar (31 August 2006). "Move to shift city bus bay draws traders' ire". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/move-to-shift-city-bus-bay-draws-traders-ire/article3098290.ece. பார்த்த நாள்: 25 January 2014. 
  3. "Sleep Like a Baby in KSRTC’s Airavat Mercedes Buses". Daijiworld Media. 29 September 2011 இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140203093031/http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=117529. பார்த்த நாள்: 26 January 2014. 
  4. "New bus service to Bangalore". தி இந்து. 19 January 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-bus-service-to-bangalore/article2813270.ece. பார்த்த நாள்: 26 January 2014. 
  5. "KSRTC to introduce new buses to Madurai, Trichy". தி இந்து (பெங்களூர்). 8 June 2013. http://www.thehindu.com/news/national/karnataka/ksrtc-to-introduce-new-buses-to-madurai-trichy/article4791980.ece. பார்த்த நாள்: 26 January 2014. 
  6. "Space earmarked for omni buses". தி இந்து (மதுரை). 30 November 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/space-earmarked-for-omni-buses/article922916.ece. பார்த்த நாள்: 26 January 2014. 
  7. 7.0 7.1 "Madurai bus stand gets auto, taxi bay". தி இந்து (மதுரை). 21 November 2013. http://www.thehindu.com/news/cities/Madurai/madurai-bus-stand-gets-auto-taxi-bay/article5374804.ece. பார்த்த நாள்: 26 January 2014. 
  8. "Mattuthavani bus stand spruced up with new seating facilities". தி இந்து (மதுரை). 23 February 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mattuthavani-bus-stand-spruced-up-with-new-seating-facilities/article4445487.ece. பார்த்த நாள்: 26 January 2014. 
  9. "ATM at bus stand". தி இந்து. 31 March 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/atm-at-bus-stand/article1229930.ece. பார்த்த நாள்: 26 January 2014. 
  10. S. Sundar (13 February 2012). "No space at Mattuthavani parking lot". தி இந்து (மதுரை). http://www.thehindu.com/news/cities/Madurai/no-space-at-mattuthavani-parking-lot/article2888011.ece. பார்த்த நாள்: 29 January 2014. 
  11. "Mayor inspects bus stand". தி இந்து (மதுரை). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mayor-inspects-bus-stand/article5299227.ece. பார்த்த நாள்: 26 January 2014. 
  12. Shastry, V. Malladi (17 June 2013). "Reporter’s Diary- Madurai". தி இந்து (மதுரை). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/reporters-diary-madurai/article4822046.ece. பார்த்த நாள்: 29 January 2014. 
  13. S. Sundar (22 August 2007). "75 stalls established to regulate flower vendors". தி இந்து (மதுரை). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/75-stalls-established-to-regulate-flower-vendors/article1896651.ece. பார்த்த நாள்: 29 January 2014. 
  14. "Rest room for crew opened in bus stand". தி இந்து (மதுரை). 31 March 2013. http://www.thehindu.com/news/cities/Madurai/rest-room-for-crew-opened-in-bus-stand/article4566802.ece. பார்த்த நாள்: 26 January 2014. 

இவற்றையும் காணவும்[தொகு]