ஜில் ஜில் ஜிகர்தண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜில் ஜில் ஜிகர்தண்டா
Alternative names ஜிகர்தண்டா
தொடங்கிய இடம் இந்தியா
பகுதி தென்னிந்தியா மதுரை
Serving temperature குளிர்ச்சி
Main ingredients கடற்பாசி, பால், சர்க்கரை, நன்னாரி சர்பத், பனிக்கூழ், சவ்வரிசி
Cookbook: ஜில் ஜில் ஜிகர்தண்டா  Media: ஜில் ஜில் ஜிகர்தண்டா

ஜில் ஜில் ஜிகர்தண்டா என்பது தென்னிந்திய உணவு வகையாகும்.[1] இது மதுரைப் பகுதியிலிருந்து தோன்றிய குளிர்பானம் ஆகும். "ஜில் ஜில்" என்பது குளிர்ச்சியையும் "ஜிகர்தண்டா" என்பது குளிர்ந்த இதயம் என்றும் இந்தியில் பொருள்படும். மதுரைக் கடைத் தெருக்களில் புத்துணர்ச்சி பானமாக இன்றும் விற்கப்படுகிறது.

தேவையானப் பொருட்கள்[தொகு]

செய்முறை[தொகு]

  1. பாலை நன்கு காய்ச்சி, வேண்டியளவு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கவும்.
  2. ஜவ்வரிசியை பாலில் வேகவைத்து பிறகு ஆறவிடவும்.
  3. நீரில் ஊறவிட்டு பலமடங்கு பெருக்கிக் கொள்ளவும். கடற்பாசியை கழுவி சுத்தம் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூழ்ம நிலைக்குக் கொண்டுவரவும்.
  4. ஒரு கண்ணாடிக் குவளையில் மேற்கூறியபடி தயாரித்த சவ்வரிசி, பால் இட்டு அதன் மீது நன்னாரி சர்பத் விட்டு நன்கு கலக்கி பனிக்கூழை இட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.

குறிப்பு: கடற்பாசிக்கு பதிலாக பாதாம் பிசினை பயன்படுத்தலாம்; நன்னாரி சர்பத்திற்கு பதிலாக ரோஸ் சிரப்பும் பயன்படுத்தலாம்; இதனுடன் சிறிது பால்கோவாவையும் சேர்த்து சுவையைக்கூட்டலாம்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "In search of Madurai Jigarthanda". த இந்து. பார்த்த நாள் 15 September 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜில்_ஜில்_ஜிகர்தண்டா&oldid=1680350" இருந்து மீள்விக்கப்பட்டது