மதுரைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரைக் கல்லூரி (தன்னாட்சி)
குறிக்கோளுரை"Learning Shines with Righteousness"
வகைபொது, இருபாலர், அரசு உதவி, தன்னாட்சி
உருவாக்கம்1889
முதல்வர்ஜெ. சுரேஷ்
பட்ட மாணவர்கள்21 (7 அரசு உதவி + 14 சுயநிதி பாடங்கள்)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்13 (9 அரசு உதவி + 4 சுயநிதி பாடங்கள்)
9
அமைவிடம், ,
வளாகம்43 ஏக்கர்கள் (170,000 m2)
நகரம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

மதுரைக் கல்லூரி (தன்னாட்சி) (Madura College) இந்தியாவில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் உள்ள ஒரு பழமையான கல்லூரியாகும். இக்கல்லூரி 1889ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 21 இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 13 முதுநிலை பட்டப்படிப்பு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

வரலாறு[தொகு]

இக்கல்லூரி 1854ஆம் ஆண்டு வூட் முயற்சியின் விளைவாக 1856ஆம் ஆண்டு ஜில்லா பள்ளியாக கல்லூரி தொடங்கப்பட்டது. 1880ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் கல்லூரித் துறையாக சேர்க்கப்பட்டது.[1] பள்ளி மற்றும் கல்லூரித் துறைகள் இரண்டும் மதுரா நேட்டிவ் ஸ்கூல் கமிட்டியால் கையகப்படுத்தப்பட்டு, 1889இல் 'மதுரா கல்லூரிக் குழு' என மறுபெயரிடப்பட்டது.[2] புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன்[3] இணைந்த கலை மற்றும் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுநிலை பாடங்களை மதுரா கல்லூரி வழங்குகிறது. இக்கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் "A" தரம் (CGPA 3.15/4) பெற்றுள்ளது.[4]

துறைகள்[தொகு]

 • தமிழ்
 • சமஸ்கிருதம்
 • இந்தி
 • ஆங்கிலம்
 • சமூகவியல்
 • தத்துவம்
 • பொருளாதாரம்
 • கணிதம்
 • இயற்பியல்
 • வேதியியல்
 • கணினி அறிவியல்
 • விலங்கியல்
 • தாவரவியல்
 • வணிகம்
 • தகவல் தொழில்நுட்பம்
 • உயிரி தொழில்நுட்பவியல்
 • நுண்ணுயிரியல்

மேனாள் மாணவர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. Jensen, Herman (July 2002). Madura Gazetteer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170209690. https://books.google.com/books?id=cqAlHNTOWJgC&q=the+Madura+College&pg=PA177. 
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Courses Offered - The Madura College". www.maduracollege.edu.in (ஆங்கிலம்). 2017-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-18 அன்று பார்க்கப்பட்டது.
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2020-06-23 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது.
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Shri. T.S. Rajam – Music Academy".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரைக்_கல்லூரி&oldid=3632056" இருந்து மீள்விக்கப்பட்டது