மதுரைத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

மதுரைத் தமிழ் அல்லது மதுரை பேச்சுத் தமிழ் என்பது தமிழ் மொழியின் ஒரு வட்டார வழக்கு ஆகும். தென் தமிழகத்தில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய மாவட்ட மக்களால் பேசப்படும் தமிழுக்கு பொதுவாக மதுரைத் தமிழ் என்று பெயர். மதுரைத் தமிழ் பிற வட்டார வழக்குகளை போல இருந்தாலும் இந்த வட்டாரத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒருசில வார்த்தைகளைக் கொண்டு இவற்றை அடையாளம் காணலாம்.

 • வந்தாங்கெ (வந்தார்கள்)
 • போனாங்கெ (போனார்கள்)
 • அங்கனக்குள்ள (அங்கே)
 • இங்ஙனக்குள்ள (இங்கே)
 • அங்கிட்டு (அந்த இடத்தில)
 • இங்கிட்டு (இந்த இடத்தில்) போன்ற வார்த்தைகளை உதாரணமாக கூறலாம்.

மதுரை மக்களின் பேச்சு வழக்கு இசைப் பின்னணி வாய்ந்தது. சொற்கள் மற்ற மாவட்டங்களில் பேசுவதைவிட சற்று நீண்டு ஒலிக்கும். 'ய' கர 'இ'கரத்தின் தாக்கம் ஒவ்வொரு சொல்லிலும் காணப்படுவதால் மதுரை அல்லாதோர் பொருள் கொள்வதில் பிறழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

சில மதுரைத் தமிழ் வழக்குகள்[தொகு]

 • அவன் இருந்தான் - அவென் இருந்த்யான் -(அவன் இருந்தேன் எனப் பிறழ்ந்து ஒலிக்க நேரும்)

நான் வந்தேன் - நான் வந்தீன்; நாங்கள் இருக்கிறோம் - நாங்க இருக்கம்

 • அல்லவா என்பது 'ல' என்று ஒரு எழுத்தாகக் குறுகிவிடும் (சொல்றம்ல, வருவம்ல)
 • எவ்வளவு - எம்புட்டு . என்னுடைய - 'என்வீட்டு' (ஏமுட்டு)
 • 'ர' கரச் சிதைவு ( ஆங்கிலத்தில் 'கார்' என்பது கா என்பதுபோல்) - அவர்கள் வந்தார்கள்; இருப்பார்கள் - அவக வந்தாக..; இருப்பாக..

மதுரைப் பகுதிகளில் நடைபெறும் கதைகளை சித்தரிக்கும் படங்களால் மதுரை வட்டார வழக்கு சிலகாலமாக பிரபலமடைந்து வருகிறது. (எ.கா - 'இப்பவே கண்ணக் கட்டுது')

கருத்தாழமுள்ள சொற்கள்[தொகு]

மதுரை மக்களின் உரையாடல்களில் போகிற போக்கில் கருத்தாழமுள்ள சொற்கள் வெளிப்படும். சில எடுத்துக்காட்டுகள் :

மதுரைத் தமிழ் விளக்கம்
அக்கப்போர் அகப்போர், உள்நாட்டுப் போர்
குண்டக்க மண்டக்க குன்றுக்கும் மண்ணுக்குமான வேறுபாடு
குத்துமதிப்பு அளவிடு பொருளை துலாக்கோல் இட்டு எடை போடாமல் குத்துயரத்தால் மதிப்பிடல்
வெஞ்சனம் தொட்டுக்கொள்ள, வியஞ்சனம், துணை உணவு, Side Dish (ஆங்கில மொழியில்)
நூனாயம் பேசுறான் நூல்நயம் பேசுகிறான்
எகனக்கி மொகன பேசுறான் எதுகை மோனை பேசுகிறான்
அகராதி எல்லாம் தெரிந்தவன்
கோளாறு தெரிஞ்சவன் நுட்பம் அறிந்தவன்
லந்து கிண்டல்(லொள்ளு)
வெஞ்சாமரம் விளக்குமாறு
சீமைஎண்ணெய் மண் எண்ணெய்
பலபட்டறை தனித்தன்மை அற்றவன்
தொம்பறை தொய்வான ஆடை
நொடியான சாலை மேடு பள்ளம் உள்ள சாலை
நொக்கிப்பிட்டான் நையப்புடைத்தான்
கூறு கெட்டவன் பகுத்தறிவு கெட்டவன்
பட்டறை (பட்டறைய போடுராங்ய) கூட்டமாக பேசுதல்
சீர் செனத்தி பட்டியலிட்ட சீர்ப் பொருள்
கொண்டேபுடுவேன் கொன்று விடுவேன்
பைய மெதுவாக
செத்த நேரம் கொஞ்ச நேரம்,சிறிது நேரம்
சீனி சர்க்கரை
மண்டை தலை
வெள்ளனே சீக்கிரம், காலைலயே
கருக்கல் சாயங்காலம்(6- 7 மணி)
உசுப்பு எழுப்பு
வைய்யிரது திட்டுவது
ஆணம் குழம்பு
சாயா டீ
ஒசக்க மேலே
உறக்கம் தூக்கம்
காண கதவடைக்க பார்க்கும் பொழுது கதவை சாத்துவது
சாத்தி வை ஓரமாக வைப்பது
பொல்லாமிருகம், வைவது,வசவு திட்டுவது
தாயேன் கேட்பது
ஊரணி குளம்(ஊருணி)
அங்குட்டு அங்கே
இங்குட்டு இங்கே
எங்குட்டு எங்கே
சோறு தின்டாச்சா சாப்புட்டாச்சா
அப்படிதேஇருக்கு நல்லா இருக்கு
அங்குட்டு நாடி அந்தபக்கம்
கொல்லை வீட்டின் பின் பக்கம்
கொலக்காடு காலைக்கடமை முடிக்கும் இடம்
நல்லாராகத்தா இருக்கு நல்லா விசித்திரமா இருக்கு
பஸ் புடுச்சு போகனும் பேருந்து ஏறிப் போகனும்
குறுக்கு இடுப்பு
தடுமம் பிடிச்சிருக்கு சளி (ஜலதோஷம்)
சோகை கரும்பில் தோகை
பகுமானம் பெருமை பேசும்போது
வவுத்த வலிக்குது வயிறு வலிக்குது
களவானிப்பைய திருடன்
களவானி திருடன்
களவாண்ட்டாங்கே திருடிவிட்டார்கள்
களவு திருட்டு
மச்சி வீடு அறை உள்ள வீடு
எங்கணக்குள்ள? எங்கே?
அலப்பறை அலட்டல்
சூதானம் ஜாக்கிரதை
நேக்கு நுட்பம்
ரவைக்கு இரவுக்கு
கோக்கு மாக்கான விவகாரமான

கருத்தாழமுள்ள சொற்கள் என்று ஜாரி, ஜாரி ஜோக்கர், ஜென்ட் ஆயிடுவோம் என்ற சொற்களை சேர்த்திருப்பது தவறானது என கருதுகிறேன். இந்த சொற்கள் பிற மதுரை சொற்களை போல அனைத்து தரப்பு மதுரை மக்களும் பயன்படுத்தும் பொது வார்த்தை அல்ல என்பதும் எனது கருத்து. தயவு கூர்ந்து சரிபார்க்கவும்.

உசிலம்பட்டி தமிழ்[தொகு]

மதுரைத் தமிழில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள பிரமலைக் கள்ளர் எனும் சாதியினர் பயன்படுத்தும் பேச்சு வழக்கு தனியானது. சற்று வித்தியாசமானதும் கூட. இந்த சாதியினர் உசிலம்பட்டி பகுதியில் அதிகமாக இருப்பதால் இவர்கள் பயன்படுத்தும் பேச்சு வழக்கு இந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து சாதியினரிடம் பரவலாகி இருப்பதுடன் அனைவராலும் பேச்சு வழக்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சில தமிழ் சொற்கள் மிகவும் வித்தியாசமாகவும் உண்மையான பொருளைத் தவிர்த்துப் புதிய பொருள் தருவதாகவும் உள்ளது. உதாரணமாக சில சொற்கள்.

 • கோளாறு - இந்தச் சொல் பழுதடைந்ததைக் குறிக்கப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவர்கள் இந்தச் சொல்லை "அறிவுடன் செயல்பட" அறிவுறுத்தப் பயன்படுத்துகின்றனர்.
 • சியான் - தாத்தா
 • மொக்கப்பன் - தாத்தா
 • மொக்கத்தாள் - பாட்டி
 • நல்லப்பன் - சிற்றப்பா (அப்பா உடன் பிறந்த சகோதரன்)
 • நல்லத்தாள் - சித்தி (அம்மா உடன் பிறந்த சகோதரி)

பிற வட்டார வழக்குகள்[தொகு]

தமிழ் மொழியில் ஏறத்தாழ 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கைத் தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தென்னாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரித்தமிழ் என வகைப்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரைத்_தமிழ்&oldid=2987004" இருந்து மீள்விக்கப்பட்டது