உள்ளடக்கத்துக்குச் செல்

புனித மரியன்னை பேராலயம், மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மரியன்னை பேராலயம்
புனித மரியன்னை பேராலயம், மதுரை
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கீழ வெளி வீதி, மதுரை, தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்9°54′48″N 78°07′33″E / 9.913417°N 78.125749°E / 9.913417; 78.125749
சமயம்கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
மண்டலம்மதுரை உயர்மறைமாவட்டம்
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
நிலைதிருத்தலம்
செயற்பாட்டு நிலைபயன்பாட்டிலுள்ளது
மதுரை புனித மரியன்னை பேராலயத்தின் பக்கவாட்டுத் தோற்றம்

புனித மரியன்னை பேராலயம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஓர் உரோம கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.[1][2]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 157.1 மீட்டர்கள் (515 அடி) உயரத்தில், (9°54′48.3″N 78°07′32.7″E / 9.913417°N 78.125750°E / 9.913417; 78.125750) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மதுரை நகரின் கீழ வெளி வீதியில் இத்தேவாலயம் அமையப் பெற்றுள்ளது.[3][4]

விவரங்கள்

[தொகு]

கி. பி. 1840ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட[5] இத்திருத்தலத்தின் கட்டிடப் பணியானது, 1841ஆம் ஆண்டு தேவாலயமாக உருப்பெற்றது.[6] தமிழ்நாட்டின் பிரபலமான தேவாலயங்களில் மதுரையிலுள்ள இதுவும் ஒன்றாகும்.[7]

இப்பேராலயத்தின் கோபுரங்களில் செர்மானியக் கட்டடக்கலை நுணுக்கங்கள், தூண்களில் கிரேக்க வடிவமைப்பு கலைகள், சிறு கோபுரங்களில் போர்த்துக்கீசிய கலைநயங்கள், சன்னல் கண்ணாடிகளின் பெல்சிய கலைவடிவங்கள், சிறு உள்கூரை வளைவு அமைப்புகளில் கோத்திக் வடிவ முறைகள், பீடத்தில் இத்தாலிய வெனீசிய கலை நுணுக்கங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.[8] கிரேக்க, உரோம, செர்மானிய, கோத்திக் கலைகளின் சங்கமத்தில் இத்தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[9]

உசாத்துணைகள்

[தொகு]
  1. ↑ "Saint Mary's Cathedral in Madurai (History, Timings & Phone) – Madurai Tourism 2023". maduraitourism.co.in. Retrieved 2023-12-13.
  2. ↑ https://www.incredibleindia.gov.in/en/tamil-nadu/madurai/st-marys-cathedral
  3. ↑ "St. Mary's Cathedral". WELCOME TO THE HISTORY OF MADURAI ARCHDIOCESE. Retrieved 2023-12-13.
  4. ↑ https://www.tamilnadutourism.tn.gov.in/destinations/st-marys-cathedral
  5. ↑ Arka Roy Chowdhury. "St Mary's Cathedral". The Times of India. Retrieved 2023-12-13.
  6. ↑ "Church of Our Lady of Dolours – Cathedral – Archdiocese of Madurai" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-12-13.
  7. ↑ "St. Mary's Cathedral in Madurai". www.sterlingholidays.com. Retrieved 2023-12-13.
  8. ↑ https://www.dinamani.com/christmas/2019/dec/25/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3315322.html
  9. ↑ "St. Mary's Cathedral Church Madurai, Tamil Nadu". www.tourmyindia.com. Retrieved 2023-12-13.