வாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவிசின் நீண்டவாள், 15ஆம் அல்லது 16ஆம் நூற்றாண்டு

வாள் என்பது உலோகத்தால் செய்யப்பட்டதும், கூரிய விளிம்பு கொண்டதும், நீளமானதுமான ஒரு ஆயுதம் ஆகும். வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கங்களுமோ கூராக இருக்கக்கூடும். விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் நுனி கூராகக் குத்துவதற்கு ஏற்றவகையிலும் இருக்கும். வாள் போர்க் கலையின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே அதிக மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்துள்ளது. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முக்கியமாக வாளின் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதும் வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்புப்பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

வரலாறு[தொகு]

தமிழர் பண்பாடு[தொகு]

சடங்குகள்[தொகு]

போரின்பொழுதும், அரச விழாக்களின் பொழுதும் வாளுக்கு முக்கிய பங்கிருக்கும். கீழ்நிலை தொடங்கி, உயர்மட்ட அளவில் உள்ள போர்வீரர் வரை, பதவிக்கேற்ப சீருடை அணிந்து வாளேந்தி, அணிவகுப்புகளை மேற்கொள்வர். அமெரிக்காவிலும் இந்த சடங்கு முறை உள்ளது. கடற்படை லீடண்ட் கமாண்டர் பதவியைவிட உயர்ந்த பதவி வகிப்பவர், அரச விழாக்களில் வாளேந்தி நிற்பர். பதவி மாற்றம் நிகழும்பொழுதும், வாளைப் பிடித்தபடி இருப்பர்.

பிற[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்&oldid=2303079" இருந்து மீள்விக்கப்பட்டது