நீர்யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்யானை
Common hippopotamus, Hippopotamus amphibius
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
பெருவரிசை: Cetartiodactyla
வரிசை: Artiodactyla
குடும்பம்: Hippopotamidae
பேரினம்: Hippopotamus
இனம்: H. amphibius
இருசொற் பெயரீடு
Hippopotamus amphibius
லின்னேயசு, 1758[1]
பரவல்[2]

நீர்யானை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியாகும். இது ஒரு தாவர உண்ணி ஆகும். கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200 கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளைவிட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்யானை&oldid=3618644" இருந்து மீள்விக்கப்பட்டது