பனமரம் ஊராட்சி
பனமரம் ஊராட்சி கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மானந்தவாடி வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் பனமரம் மண்டலத்திற்கு உட்பட்டது.[1] இந்த ஊர் 80.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் வடக்கில் புல்பள்ளி, மானந்தவாடி ஆகிய ஊர்களும், ரிசர்வ் ஃபாரஸ்டும் உள்ளன. இதன் கிழக்கில் பூதாடி என்னும் ஊர் உள்ளது. தெற்கில் கணியாம்பற்றா, பூதாடி ஆகிய ஊர்கள் உள்ளன. மேற்கில் வெள்ளமுண்டா, எடவகா ஆகிய ஊர்கள் உள்ளன.
இது வயநாடு மாவட்டத்தின் நடுப்பகுதியில் உள்ளது. இது சுல்தான் பத்தேரியில் இருந்து 29 கிலோமீட்டர்க் தொலைவிலும், மானந்தவாடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 38615 மக்கள் வாழ்ந்தனர்.
இந்த ஊரின் அருகில் பழசிராஜாவின் கோட்டை உள்ளது. கிழக்குப் பகுதியில் சிதைந்த ஜைனக் கோயில் உள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கம்பனி ஆறு பாய்கின்றது.
சான்றுகள்[தொகு]
- ↑ "Census of India : Villages with population 5000 & above". 2008-12-10 அன்று பார்க்கப்பட்டது.
|first=
missing|last=
(உதவி)