பனமரம் ஊராட்சி
பனமரம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°44′20″N 76°04′23″E / 11.739°N 76.073°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | வயநாடு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 11,651 |
மொழி | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 670721 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL 12 |
பனமரம் ஊராட்சி கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மானந்தவாடி வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் பனமரம் மண்டலத்திற்கு உட்பட்டது.[1] இந்த ஊர் 80.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் வடக்கில் புல்பள்ளி, மானந்தவாடி ஆகிய ஊர்களும், ரிசர்வ் ஃபாரஸ்டும் உள்ளன. இதன் கிழக்கில் பூதாடி என்னும் ஊர் உள்ளது. தெற்கில் கணியாம்பற்றா, பூதாடி ஆகிய ஊர்கள் உள்ளன. மேற்கில் வெள்ளமுண்டா, எடவகா ஆகிய ஊர்கள் உள்ளன.
இது வயநாடு மாவட்டத்தின் நடுப்பகுதியில் உள்ளது. இது சுல்தான் பத்தேரியில் இருந்து 29 கிலோமீட்டர்க் தொலைவிலும், மானந்தவாடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள்தொகை[தொகு]
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பனமரத்தில் 2916 குடும்பங்களில் 6219 ஆண்கள் 6464 பெண்கள் என 12683 பேர் உள்ளனர். இதில் 1512 பேர் ஆறு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள். ஆண் பெண் பாலின விகிதம் 1039 ஆகும்.[2]
இந்த ஊரின் அருகில் பழசிராஜாவின் கோட்டை உள்ளது. கிழக்குப் பகுதியில் சிதைந்த ஜைனக் கோயில் உள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கம்பனி ஆறு பாய்கின்றது.