வலைவாசல்:கேரளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள வலைவாசல்
.
தொகு 

கேரளம் - அறிமுகம்

கேரளம் அல்லது கேரளா (Kerala, ['keːɹəˌlə]?·i (ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது [ˈkeːɾəˌɭəm] (உள்ளூர்); மலையாளம்: കേരളം, — Kēraḷaṁ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.


தொகு 

சிறப்புக் கட்டுரை

மோகினியாட்டம்
மோகினியாட்டம் தென் இந்திய மாநிலமான கேரளாவில் நடைபெறும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும். மோகினியாட்டம் தஞ்சை நால்வருள் ஒருவரான வடிவேலுவால் வளர்க்கப்பட்ட நடன வகை. பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்கள் மோகினியாட்டத்தில் காணக்கிடைக்கின்றன. மோகினி என்ற சொல் ஒரு அழகான பெண்ணென்றும், ஆட்டம் நடனம் என்றும் பொருள் படும். பாற்கடலிலிருந்து தோன்றிய அமிர்தத்தை விநியோகிக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய மோகினியே இந்த நடனக் கலையின் பெயருக்கு மூல காரணம் ஆகும். இது லாசியம் நடனமாகும்.






தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

  • மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும்.
  • கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா (படம்) கொண்டாடப்படுகிறது.


தொகு 

சிறப்புப் படம்

{{{texttitle}}}

கதக்களி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.

கதக்களி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

படம்: User:Jovianeye
தொகுப்பு


தொகு 

செய்திகள்

வலைவாசல்:கேரளம்/செய்திகள்

தொகு 

விக்கித் திட்டங்கள்


தொகு 

பகுப்புகள்

தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
தொகு 

தலைப்புகள்

தொகு 

தொடர்புடைய வலைவாசல்கள்

தொகு 

விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கேரளம்&oldid=1616781" இருந்து மீள்விக்கப்பட்டது