குளச்சல் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குளச்சல் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்த்தாண்ட வர்மரிடம் சரணடையும் டி லனாய்

குளச்சல் போர் கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போர்.

போர்[தொகு]

இப்போரில் டச்சுப்படை நவீன ஆயுதங்களுடன் மோதியும் திருவிதாங்கூர் படையிடம் தோற்றது. டச்சுப் படை தளபதி [இயுஸ்ட்டாச்சியஸ் டிலனோய்|டிலனாயை கைது செய்யப்பட்டார். பின்னர் திருவிதாங்கூர் படையை நவீன படுத்த படைதளபதியாக நியமிக்கப்பட்டார். இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது. டச்சுப் படை தளபதி டினலாய் கல்லறை கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரிக்கோட்டையில் இன்றளவும் உள்ளது.


அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 1698-1750 ஆகும். இவர் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏற உதவியர். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார். 1741-இல் குளச்சலில் நடைபெற்ற குளச்சல் சண்டையில் மார்த்தாண்டவர்மா ஆரசுக்கும் - டச்சுப் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார். இப்போரில் அனந்த பத்மநாப நாடார் தலைமையில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு டச்சுப் படையினரை தோற்கடித்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

குளச்சல் போர்
வி. நாகம் அய்யா - திருவிதாங்கூர் நாட்டு கையோடு பக்கம் 342-343

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளச்சல்_போர்&oldid=1918927" இருந்து மீள்விக்கப்பட்டது