கொல்லங்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொல்லங்கோடு
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

38,385 (2011)

3,037/km2 (7,866/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.64 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kollemcode

கொல்லங்கோடு (Kollankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் பத்திரகாளி அம்மனுக்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தூக்கத் திருவிழா கொண்டாடப்படுகிறது. [3]

2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [4][5]

அமைவிடம்[தொகு]

கொல்லங்கோடு பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கிமீ தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கிமீ; வடக்கில் பாறசாலை 9 கிமீ; தெற்கில் மேடவிளாகம் 0.50 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பாறசாலையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

12.64 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 மக்கள்தொகையும் கொண்டது. [7][8]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா
  4. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
  5. kumbakonam corporaon and 19 muniicipalites
  6. கொல்லங்கோடு பேரூராட்சியின் இணையதளம்
  7. கொல்லங்கோடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  8. https://www.citypopulation.de/php/india-tamilnadu.php?adm2id=3328

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லங்கோடு&oldid=3485678" இருந்து மீள்விக்கப்பட்டது