அஞ்சரக்கண்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஞ்சரக்கண்டி என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது கண்ணூர் தொடருந்து நிலையத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ”இரண்டு தறை” என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு மிளகு விளைந்ததால், அவர்கள் தங்கள் பதிவகத்தை இங்கு அமைத்துள்ளனர்.
இங்கு ஐந்து கண்டி, அரைக் கண்டி சுற்றளவு கொண்ட இரண்டு தோட்டங்கள் இருந்தமையால் அஞ்சரக்கண்டி என்ற பெயரை பெற்றது. இங்கு அஞ்சரக்கண்டி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அஞ்சரக்கண்டிப்புழை பாய்கிறது. அஞ்சரக்கண்டியில் புகழ்பெற்ற இலவங்கத் தோட்டம் உள்ளது. இந்த இலவங்கத் தோட்டத்தில் இலவங்க எண்ணை வடிக்கிறார்கள்.