வளபட்டணம்

ஆள்கூறுகள்: 11°54′N 75°22′E / 11.9°N 75.37°E / 11.9; 75.37
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளபட்டணம்
ஊர்
முச்சிலோட்டு பகவதி தெய்யம்
முச்சிலோட்டு பகவதி தெய்யம்
ஆள்கூறுகள்: 11°54′N 75°22′E / 11.9°N 75.37°E / 11.9; 75.37
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
அரசு
 • வகைபஞ்சாயத்து
 • நிர்வாகம்வளபட்டணம் கிராம பஞ்சாயத்து
ஏற்றம்
6 m (20 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்8,369
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL
வளபட்டணம் பாலம்
மணல் அள்ளுதல்
களரி வாத்துக்கல் கோயில்

வளபட்டணம் (Valapattanam) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது கேரளத்தின் மிகச்சிறிய பஞ்சாயத்து. இதன் பரப்பளவு 2.04 சதுர கி.மீ. இது கண்ணூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. வளபட்டணம் முஸ்லீம்கள் வாழும் ஒரு முக்கியப் பகுதியாகும். [சான்று தேவை] வளபட்டணம் சமுதாய நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றது. ஒருபுறம் களரிவத்துக்கல் கோயிலும், மறுபுறம் "கக்குளங்கர மசூதி"யும் உள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த நகரம் பால்யபட்டனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் வளபட்டணம் ஆற்றின் கரையில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வளபட்டணம் வளபட்டணம் ஆறு (വളപട്ടണം പുഴ) வணிகத்துக்கான முக்கிய கப்பல் பாதையாகவும், வளபட்டணம் முக்கிய நகரமாகவும் இருந்தது, இதன் காரணமாக இந்த நகரம் "வளய பட்டணம்" என்று அழைக்கப்பட்டது, அதாவது மலையாள மொழியில் "பெரிய நகரம் " என்பதாகும்.

வரலாறு[தொகு]

இந்த நகரம் அதன் வரலாற்றுகால நிறுவனரான புலி நாடு வம்சத்தின் ( கோலாத்திரி குடும்பம்) இரண்டாம் வல்லபரின் பெயரைக் கொண்டதாக முதலில் வல்லப-பட்டணம் என்று அறியப்பட்டது [1] இடைக்கால கட்டத்தில் புலிநாட்டு வம்சத்தின் தலைநகராக விளங்கியது. [ மேற்கோள் தேவை ]

வர்த்தகம்[தொகு]

வளபட்டணம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வெஸ்டர்ன் இந்தியா பிளேவுட் லிமிடெட், தொழிற்சாலையானது நாட்டின் மர அடிப்படையிலான மிகப்பெரிய தொழிலகமாகும். இது ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய ஒட்டு பலகை தொழிற்சாலையாக இருந்தது. இந்த ஒட்டு பலகை மற்றும் மர அடிப்படையிலான தொழில்கள் ஒருகாலத்தில் இப்பகுதியில் செழித்து இருந்தன. இவை முழுமையாக ஏற்றுமதியை நம்பியே இருந்த காரணத்தால் நாளாவட்டத்தில் குன்றிப்போயின. ஒட்டுப்பலகை தொழில் தவிர வளபட்டணமானது சிறிய அளவிலான மணல் சுரங்கம், மீன்வளம் சார்ந்த தொழில்களுக்கு பிரபலமானது. கண்ணூரில் உள்ள பல முக்கிய தொழில்களின் கிடங்குகள் வளபட்டனத்தில் அமைந்துள்ளன.

சமயம்[தொகு]

இன நல்லிணக்கமும், அமைதியான சகவாழ்வு பாரம்பரியத்திற்காக அறியப்பட்டதும், பல நூற்றாண்டுகால பாரம்பரியம் கொண்ட ஏராளமான சமய மையங்கள் இங்கு அமைந்துள்ளன.

புகழ்பெற்ற முத்தப்பன் கோயில் வளபட்டணம் ஆற்றின் கரையில் உள்ளது.

நிலவியல்[தொகு]

வளபட்டணமானது 11°54′N 75°22′E / 11.9°N 75.37°E / 11.9; 75.37 புவியியல் குறியீட்டில் அமைந்துள்ளது. [2] இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 6 மீட்டர் (19   அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

புறநகர் மற்றும் கிராமங்கள்[தொகு]

  • மன்னா, வளபட்டணம்
வலப்பட்டணம் சந்தி

மக்கள் வகைப்பாடு[தொகு]

As of 2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி,[3] வளபட்டணத்தின் மக்கள் தொகை 8369 ஆகும். இதில் ஆண்கள் 50%, பெண்கள் 50%. என உள்ளனர். வளபட்டனத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 81% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 79%. என உள்ளது. வளபட்டணத்தின், மக்கள் தொகையில் 14% பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.

படங்கள்[தொகு]

கேரளத்தின் சிறந்த ஊராட்சிகளில் ஒன்றாக வளபட்டணம் ஊராட்சி மதிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட, மாநில அதிகாரிகளாலும், பொதுமக்களாலும் பாராட்டப்பட்டுள்ளன.

மேலும் காண்க[தொகு]

  • முத்தப்பன் கோயில்
  • ஸ்ரீ முத்தப்பன்
  • கண்ணூர்

குறிப்புகள்[தொகு]

  1. Ezhimala: the abode of the Naval Academy by Murkot Ramunny in 1993, Northern Book Centre, New Delhi
  2. Falling Rain Genomics, Inc - Valapattanam
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளபட்டணம்&oldid=3008582" இலிருந்து மீள்விக்கப்பட்டது