தினஜ்பூர் மாவட்டம், வங்காளதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் தினஜ்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

தினஜ்பூர் மாவட்டம் (Dinajpur District) (வங்காள மொழி: দিনাজপুর) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வடமேற்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் தினஜ்பூர் நகரம் ஆகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

3444.30 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் வடக்கில் தாகுர்காவ்ன் மாவட்டம் மற்றும் பஞ்சகர் மாவட்டங்களும், தெற்கில் ஜெய்பூர்ஹட் மாவட்டம் மற்றும் காய்பாந்தா மாவட்டங்களும், கிழக்கில் ரங்க்பூர் மாவட்டம் மற்றும் நீல்பமரி மாவட்டங்களும் மற்றும் மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலமும் எல்லைகளாக உள்ளது. [1]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ரங்க்பூர் கோட்டத்தில் அமைந்த தினஜ்பூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக பதின்மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டம் தினஜ்பூர், பீரம்பூர், சேதப்கஞ்ச், ஹக்கிம்பூர், பீர்கஞ்ச், புல்பாரி மற்றும் பர்த்திபூர் என எட்டு நகராட்சி மன்றங்களையும், 101 உள்ளாட்சி ஒன்றியங்களையும், 2131 கிராமங்களையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டம் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 5200 ஆகும்.[2]

வேளாண்மை[தொகு]

இம்மாவட்டத்தில் ஜமுனா, கார்தோ, அட்ராய்,புணர்பாபா, தங்கோன், சோட்டா ஜமுனா, பேலன், இஷாமோதி, வுள்ளி, நோத்தோ, தீபா, சோட்டா தீபா முதலிய ஆறுகள் பாய்வதால் வேளாண்மைத் தொழில் செழிப்பாக உள்ளது. இங்கு விளச்சிப்பழம், மா, நெல், கரும்பு, சணல், வெங்காயம், வாழை, கோதுமை, இஞ்சி, எண்ணெய் வித்துக்கள், தென்னை முதலியவைகள் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1919 மில்லி மீட்டராக உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

3444.30 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 8 29,90,128 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 15,08,670 ஆகவும், பெண்கள் 14,81,458 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 102 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 868 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 56.7 % ஆக உள்ளது.[3]

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

தட்ப வெப்பம்[தொகு]

தினஜ்பூர் மாவட்டத்தின் தட்ப வெப்பம் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 32.8° செல்சியல் ஆகவும், குளிர்காலத்தில் அதிகபட்சமாக 14.4° செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், தினஜ்பூர் மாவட்டம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 24.4
(76)
26.7
(80)
30.6
(87)
31.7
(89)
32.8
(91)
31.1
(88)
32.2
(90)
31.1
(88)
30.6
(87)
30.6
(87)
28.3
(83)
25
(77)
29.4
(85)
தாழ் சராசரி °C (°F) 14.4
(58)
17.2
(63)
22.2
(72)
25
(77)
26.1
(79)
27.2
(81)
27.2
(81)
27.2
(81)
26.7
(80)
25
(77)
20.6
(69)
16.1
(61)
22.8
(73)
பொழிவு mm (inches) 8
(0.3)
20
(0.8)
58
(2.3)
117
(4.6)
267
(10.5)
358
(14.1)
399
(15.7)
318
(12.5)
257
(10.1)
163
(6.4)
30
(1.2)
5
(0.2)
1,979
(77.9)
[சான்று தேவை]

கல்வி[தொகு]

இம்மாவட்டத்தில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும், இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]