ஜெய்பூர்ஹட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காளதேசத்தில் ஜெய்பூர்ஹட் மாவட்டத்தின் அமைவிடம்

ஜெய்பூர்ஹட் மாவட்டம் (Joypurhat District) (வங்காள: জয়পুরহাট জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் அமைந்துள்ளது. [1]வங்காளதேசத்தில் வடக்கு பகுதியில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜெய்பூர்ஹட் நகரம் ஆகும். இம்மாவட்டம் 26 பிப்ரவரி 1984-இல் துவக்கப்பட்டது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

ஜெய்பூர்ஹட் மாவட்டத்தின் வடக்கில் தினஜ்பூர் மாவட்டமும் மற்றும் [[ரங்க்பூர் மாவட்டம்|ரங்க்பூர்மாவட்டமும்], கிழக்கில் காய்பந்தா மாவட்டமும், தெற்கிலும், தென்கிழக்கிலும் போக்ரா மாவட்டமும், மேற்கிலும், தென்மேற்கிலும் நவகோன் மாவட்டமும், வடமேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு தினஜ்பூர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

1012.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஜெய்பூர்ஹட், கேத்லால், அக்கேல்பூர், கலாய் மற்றும் பச்பீபி என ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் நான்கு நகராட்சி மன்றங்களையும், முப்பத்தி இரண்டு கிராம ஒன்றியக் குழுக்களையும், 661 வருவாய் கிராமங்களையும், 887 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 5900 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0571 ஆகும். இம்மாவட்டம் இரண்டு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தை மட்டும் சார்ந்து உள்ளது. இம்மாவட்டத்தில் சோட்டா ஜமுனா ஆறு, துளசிகங்கா ஆறு, சிறீ ஆறு, சிறீ நாடி ஆறு முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டதாக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1610 மில்லி மீட்டராக உள்ளது.

இம்மாவட்டத்தில் நெல், கரும்பு, சணல், மஞ்சள், வாழை, மா, பலா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, புகையிலை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள் முதலியன பயிரிடப்படுகிறது. இங்கு கரும்பு ஆலைகள், அரிசி ஆலைகள், கோழிப் பண்ணைகள் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

1012.41 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 9,13,768 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,59,284 ஆகவும், பெண்கள் 4,54,484 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.75% ஆக உள்ளது. பாலின விகிதம் 101 ஆண்களுக்கு பெண்கள் 100 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 903 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 57.5% ஆக உள்ளது. [3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் நாற்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட சோதல், ஒரோ, முண்டா, மொகாலி, மொகந்தா, ராஜ்ஹன்சி முதலிய பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள்[தொகு]

இம்மாவட்டத்தில் நாற்பத்தி இரண்டு கல்லூரிகளும், 165 மேனிலைப் பள்ளிகளும், 350 தொடக்கப் பள்ளிகளும், 13 தொழில்நுட்ப நிறுவனங்களும், 111 இசுலாமியக் கல்வி புகட்டும் மதராசாக்களும் உள்ளது.

தட்ப வெப்பம்[தொகு]

இம்மாவட்டம் கோப்பன் காலநிலை கொண்டது. இங்கு கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம் 28.9° செல்சியஸ் ஆகவும்; குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 18° செல்சியஸ் ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழையளவு 1738 மில்லி மீட்டராகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜெய்பூர்ஹட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 24.8
(76.6)
27.6
(81.7)
32.5
(90.5)
35
(95)
33.6
(92.5)
32.4
(90.3)
31.7
(89.1)
31.6
(88.9)
31.7
(89.1)
31.1
(88)
28.7
(83.7)
25.9
(78.6)
30.55
(86.99)
தினசரி சராசரி °C (°F) 18
(64)
20.2
(68.4)
24.9
(76.8)
28.4
(83.1)
28.7
(83.7)
28.9
(84)
28.9
(84)
28.9
(84)
28.6
(83.5)
27
(81)
22.8
(73)
19.3
(66.7)
25.4
(77.7)
தாழ் சராசரி °C (°F) 11.2
(52.2)
12.9
(55.2)
17.3
(63.1)
21.9
(71.4)
23.8
(74.8)
25.4
(77.7)
26.1
(79)
26.2
(79.2)
25.6
(78.1)
22.9
(73.2)
17
(63)
12.6
(54.7)
20.24
(68.44)
பொழிவு mm (inches) 10
(0.39)
15
(0.59)
21
(0.83)
52
(2.05)
186
(7.32)
330
(12.99)
364
(14.33)
321
(12.64)
283
(11.14)
140
(5.51)
13
(0.51)
3
(0.12)
1,738
(68.43)
ஆதாரம்: National newspapers

மேற்கோள்கள்[தொகு]

  1. Md Azizul Haq (2012). "Joypurhat District". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Joypurhat_District. 
  2. Joypurhat District, Bangladesh
  3. Community Report Joypurhat Zila June 2012

வெளி இணைப்புகள்[தொகு]