காய்பாந்தா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காளதேசத்தில் காய்பாந்தா மாவட்டத்தின் அமைவிடம்

காய்பாந்தா மாவட்டம் (Gaibandha district) (வங்காள: গাইবান্ধা জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காய்பாந்தா நகரம் ஆகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

2179.27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காய்பாந்தா மாவட்டத்தின் வடக்கில் குரிகிராம் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களும், தெற்கில் போக்ரா மாவட்டமும், மேற்கில் தினஜ்பூர் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களும், கிழக்கில் ஜமால்பூர் மாவட்டம், குரிகிராம் மாவட்டம் மற்றும் பிரம்மபுத்திரா ஆறும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

2114.77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காய்பந்தா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஏழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: காய்பந்தா சதர், ஷாதுரம்பூர், கோபிந்தாகஞ்ச், சுந்தர்கஞ்ச், சகாதா, புல்பரி மற்றும் பலேஷ்வரி ஆகும்.

மேலும் இம்மாவட்டம் கோபால்கஞ்ச், சுந்தர்கஞ்ச் மற்றும் காய்பந்தா என மூன்று நகராட்சி மன்றங்களையும், 82 கிராம ஒன்றியங்களையும், 1250 கிராமங்களையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டம் ஐந்து வங்காள தேச நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது. காய்பாந்தா மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 5700 ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மைப் பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்ட இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆறு, ஜமுனா ஆறு, டீஸ்டா ஆறுகள் இம்மாவட்டத்தில் 107.71 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்வதால், நெல், சணல், கோதுமை, புகையிலை, கரும்பு, காய்கறிகள், ஆமணக்கு, வெங்காயம், மிளகாய் மற்றும் வெள்ளைப்பூண்டு பயிரிடப்படுகிறது.[1]

நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை 44.45%, கூலித் தொழிலாளர்கள் 27.72%, வணிகம் 9.11%, போக்குவரத்து 1.89% சேவைத் துறை 4.49% மற்ற துறைகள் 9.76% ஆக பங்காற்றி வருகிறது.

இம்மாவட்டத்தில் நஞ்செய் நிலங்கள் 149475 ஹெக்டேர்களும், புஞ்செய் நிலங்கள் 67565.16 ஹெக்டேர்களும் உள்ளது. ஒரு போக சாகுபடி 20.5% ஆகவும், இரண்டு போக சாகுபடி 58.5% ஆகவும் மற்றும் மூன்று போக சாகுபடி 21% அளவாகவும் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2114.77 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 23,79,255 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,69,127 ஆகவும், பெண்கள் 12,10,128 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 97 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1125 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 42.8 % ஆக உள்ளது.[2][3] பெரும்பாலான காய்பாந்தா மாவட்ட மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் 44 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 291 உயர்நிலைப் பள்ளிகளும், 31 இளையோர் உயர்நிலைப் பள்ளிகளும், 498 மதராசாக்களும், 1283 துவக்கப் பள்ளிகளும் உள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gaibandha District
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்பாந்தா_மாவட்டம்&oldid=3239575" இருந்து மீள்விக்கப்பட்டது